தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 மே, 2018

தண்ணீரை இப்படி குடித்தால் நோய்கள் நம்மை நெருங்காது


தண்ணீர் தானேங்க.. நாங்க எப்பவும் இதைத்தானே பண்றோம் இதுல கூடவா விதிமுறைகள் னு முணுமுணுக்கறிங்களா.
தண்ணீர் விஷயத்துல நாம நிறைய தவறான விஷயங்களை காத்துக்கிட்டிருக்கோம்ங்கறதுதான் உண்மைங்க.
தண்ணீரோ உணவோ உயிருக்கு ஆதாரமான உணவுகள் எந்த வகையில எடுத்து கிட்டாலும் அதுக்குன்னு உள்ள சில வழிமுறைகள் பின்பற்றினா நிச்சயம் அது நம் உடலுக்கு நன்மை மட்டுமே செய்யும்.
தண்ணீர் குடிக்கற விஷயத்துல பெரும்பாலும் நாம் பின்பற்றி வருவது ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்கிறது தான்.
இதுக்கடுத்த விஷயம் தண்ணீரை வடிகட்டி குடிக்கறது, காய்ச்சி ஆற வைத்து குடிப்பது.
இன்னொரு விஷயம் என்னனா நாகரீகத்துக்காக நீர் குடிக்கறப்போ அண்ணாந்து தொண்டைக்குள் தண்ணீரை தொடர்ந்து அனுப்பி ஒரே மூச்சுல குடிக்கறது.

அண்ணாந்து குடிக்கறது நல்ல பழக்கம்தான் ஆனால் ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே மூச்சில் குடிப்பது தவறானது. இது நமது சிறுநீரகத்தை பாதிக்கும்.
என்னது தண்ணீர் குடிக்கறதால சிறுநீரகம் பாதிக்கப்படுமா என்ன கதை விடறீங்களானு யோசிக்கறீங்களா. நிஜம்தாங்க. சிறு நீரகத்தோட வேலை உடலுக்கு அவசியமான நீரை தக்க வைத்துக் கொண்டு மீதியை வெளியே அனுப்புவது. இப்படி ஒரே மூச்சில் குடித்தால் மொத்த நீரும் சத்துக்கள் எதுவும் எடுத்துக் கொள்ளப்படாமல் நேரே சிறுநீரகத்திற்கு சென்று நிற்கிறது. அதில் உள்ள சத்துக்களும் வெளியேறுவதால் சிறுநீரகம் இரண்டு மடங்காக வேலை செய்கிறது. இதன் மூலம் சிறுநீரகம் பாதிப்படைகிறது
அடுத்தது தண்ணீரை வடிகட்டி குடிப்பது இப்படி வடிகட்டுவதன் மூலம் நீரில் இயற்கையாக உள்ள சத்துக்களில் 90 சதவிகிதம் வடிகட்டப்பட்டு விடுகிறது. அதன் பின் நீரில் இயற்கையாக அமைந்துள்ள மினெரல்ஸ் இரும்பு சத்து போன்றவற்றை நாம் வெளியிலிருந்து மருந்துகளாகவோ உணவாகவோ எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறோம்.

அது போலவே கொதிக்க வைத்த நீரை குடிப்பது. இதன் மூலம் நீரில் உள்ள உயிர்சத்துக்கள் அனைத்தும் இறந்து விடுகின்றன. வெதுவெதுப்பான நீர்தான் அருந்த வேண்டுமே தவிர நன்கு கொதித்து ஆவியாகி ஆற வைத்து குடிக்க கூடாது. நீரில் கிருமிகள்னு சொல்ல கூடிய விஷயங்கள் 5 சதவிகிதம்தான் இருக்கிறது இந்த 5 சதவிகித கிருமிகளை அழிப்பதற்காக 95 சதவிகித சத்துக்களை இழந்து நாம் ஒரு வெறுமையான நீரை அருந்துகிறோம்.

ஆகவே நீரை அப்படியே அருந்துவதுதான் சரியான முறை ஏனெனில் காற்றில் உள்ள கிருமிகளை நம் உடல் தானே வடிகட்டி கொள்ளும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறது. அதே போலத்தான் நீர் அருந்துவதன் மூலம் ஏற்படும் கிருமிகளையும் உடல் தானே சுத்திகரிப்பு செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வடிகட்டிய நீர் மூலம் அந்த உறுப்புகள் தங்களது இயல்பான வேலையை செய்ய முடியாததால்தான் உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
வடிகட்டாத நீர் , காய்ச்சாத நீர் அப்படினு இங்க சொல்ல வரது எல்லாமே சுத்தமான கிணற்று நீர் பற்றியது. இப்போதெல்லாம் இந்த நீர் கிடைப்பதில்லை எனினும் போர் முறையில் நேரடியாக கிணற்று நீர் குழாயில் வரும். அதை பயன்படுத்தலாம்.

இயற்கையான முறையில் நீரை எப்படி சுத்தம் செய்வது என்று பார்த்தோமானால் அதற்கு நமக்கு பெரும் உதவி செய்வது ஆதியிலிருந்து நாம் பயன்படுத்தி வந்த மண்பானை. மண்பானையில் எந்த நீரை ஊற்றி 12 மணி நேரம் கழித்து குடித்தாலும் அது மிக அருமையாக சுத்திகரிக்கப்பட்டு புதிய சுவையுடன் நாம் குடிக்க தயார் நிலையில் இருக்கும்.


இந்த சுத்திகரிப்பும் போதவில்லை என்பவர்கள் தேத்தான்கோட்டை ஆங்கிலத்தில் இதனை Clearing Nuts என்று கூறுவர். அதனை பயன்படுத்தி மண்பானையில் அடியில் சற்று தேய்த்து விட நீரில் உள்ள கிருமிகள் கொல்லப்படும். மேலும் உடலுக்கு குளிர்ச்சி பெண்களுக்கான அந்தரங்க நோய்கள் போன்றவை நீங்க வழி வகுக்கும்.

அது மட்டும் இல்லாமல் கொய்யா மரத்தின் கிளைகளில் ஒரு சிறு துண்டை பானை உள்ளே போடலாம் அல்லது நெல்லிக்காய் மரத்தில் உள்ள சிறு கிளையை மண்பானையினுள் போடலாம். இது போன்று அருந்துவதால் அதன் இயற்கை சத்துக்கள் அழியாமலே நீர் சுத்தமாகிறது.
நீர் அருந்தும் முறை
தண்ணீரை ஏனோ தானோ என்று மடக் மடக் என்று முழுங்காமல் நிதானமாக பருக வேண்டும். ஒரு பாயசம் உண்பதை போல நீர் பருகி வந்தால் அதற்கான சத்துக்கள் நம் உடலில் தாங்கும். இப்படி அருந்துவதன் மூலம் தீராத தாகங்கள் கூட சரியாகும்.

தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். அது போலவே தாகம் எடுத்தால் உடனே நீர் அருந்தி விட வேண்டும். தாமதப்படுத்த கூடாது. ஏனெனில் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் நீரின் தேவையை உணர்ந்து நீர் வேண்டும் என மூளைக்கு தகவல் அனுப்புவதன் மூலமே தாகம் ஏற்படுகிறது ஆகவே தாகத்தை நாம் அலட்சியப்படுத்த கூடாது.
மேற்கண்ட முறைகளை தொடர்ந்து வந்தால் நீரால் நமக்கு கிடைக்க கூடிய அனைத்து சக்திகளும் இதுவரை கிடைத்திராத சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.
ஆகவே சாதாரணமாக நாம் அருந்தி வந்த நீரை சரியாக அருந்துவதன் மூலம் நமது உடல் பல நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை


http://news.lankasri.com/health/03/178132?ref=ls_d_lifestyle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக