தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 மே, 2018

இந்த ஐந்து விதையும் வீட்ல வெச்சிருந்தா தீராத நோயும் தலைதெறிக்க ஓடுமாம்..!


கோடை வெயிலை தனிக்கும் விதமாக நிறைய உணவுகளை நாம் உண்ணலாம். ஆனால் அவை நம் உடலின் ஆரோக்கியத்தை பொறுத்தே அவை செயல்படும். ஆனால் பழ வகைகளை சாப்பிட்டால் ஆரோக்கிய நன்மைகளை பெருவோம்.
ஆனால் சில பழங்களில் இருக்கும் கொட்டைகளில் ஊட்டச்சத்து இருப்பதை அறியாமல் இருப்போம். அப்படி இருக்கும் 5 பழங்களின் கொட்டையின் நன்மைகளை பார்ப்போம்.

பூசணி விதை

பூசணிவிதை 5 அல்லது 10-யை எடுத்து கொதித்த தண்ணீரில் ஊரவைத்து வடிகட்டிய பின்னர் எண்ணைய் சேர்த்து வறுத்து அதில் உப்பு சேர்த்து வைக்கவும்.
இதனால் ஒமேகா 6 கொழுப்பும், புரதக் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், மங்கனீஸ், காப்பர், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், ஜின்க், செலினியம் போன்ற மினரல்கள் உள்ளன.

பப்பாளி விதை

கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் பப்பாளி விதையில் உள்ளன. செரிமானத்தால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் தன்மையுள்ளது. கசப்புத்தன்மை இருந்தாலும், அதை முழுவதும் அப்படியே சாப்பிட்டாலும் தேனைகலந்து சாப்பிட்டாலும் நல்லது.

ஆளி விதை

ஒமேகா 3 கொழுப்பும், நார்ச்சத்து, வைட்டமின் பி 1, மினரல்கள், காபப்ர், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்றவை கொழுப்பு சத்துக்கள் உள்ளன. சூப்பில் விதைகளை வறுத்து சாப்பிட்டால் நல்லது.

தர்பூசணி விதை

தேவையில்லை என்று கீழே போடும் தர்பூசணி பழத்தில் விதிகளில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின், மினரல்கள், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜின்க், இரும்பு, பொட்டசியம், காப்பர் போன்ற சத்துக்களும் தர்பூசணி விதைகளில் உள்ளன. இதை காயவைத்து, முளைக்க வைத்தால் பயனாக இருக்கும்.

சூரியகாந்தி விதை

ஒமேகா 6 கொழுப்புகளும், வைட்டமின் ஈ, பி காம்ப்ளெக்ஸ் அதிகமாக உள்ளது. இரும்பு, கால்சியம், மங்கனீஸ், ஜின்க் போன்ற மினரல்களும், ட்ரிப்டோபான் என்ற அமினோ அமிலமும் உள்ளதால் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக