தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 மே, 2018

10 வயதில் திருமணம்...தெருவில் பிச்சையெடுப்பு: இன்று உலகை திரும்பி பார்க்க வைத்த பெண்


மகாராஷ்டிராவில் வரதா எனும் நகரில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி பிறந்தவர் சிந்துதாய்.
இவரது தந்தை மாடுமேய்க்கும் வேலை செய்து வந்ததால், வறுமையின் பிடியில் இருந்தது இவர்களது குடும்பம். சிந்து தாயை எப்போதும் அவரது அம்மா திட்டிக்கொண்டே இருப்பார்.
நீயெல்லாம் உறுப்படமாட்டாய்....எதற்கும் உபயோகம் இல்லாதவள் என்று எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். தாய் இவரைபள்ளி செல்வதற்கு அனுமதிக்கவில்லை.
ஆனால், படிப்பதற்கு தந்தை அனுமதியளித்தார். படிப்பதற்கு சிலேடு வாங்க கூட பணம் இல்லாமல் Bharadi மரத்தின் இலைகளில் எழுதி படித்தார்.
இருப்பினும் குடுபத்தின் வறுமை தொடர்ந்ததால், இவருக்கு, 10 வயது இருக்கையில் , நவர்கோன் எனும் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஹரி என்கிற ஹர்பாஜி எனும் 30 வயது, மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்த ஆணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இருபது வயதுக்குள் மூன்று குழந்தைகள் பெற்றெடுத்தார்.

கிராம மக்களிடம் இருந்து மிரட்டி, வரட்டிகளை இலவசமாக பெற்று அதை வனத்துறையினருக்கு எரிவாயுவாக பயன்படுத்த விற்று பணம் பார்த்து வந்த நபரை இவர் எதிர்த்த காரணத்தால், கணவர் சிந்துதாயை விரட்டியடித்துள்ளார்.
ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த இவரை கணவர் விரட்டியடித்தபோது, ஒரு மாட்டு கொட்டகையில் தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டார் .
தொப்புள்கொடியை தன் அருகே இருந்த ஒரு கூர்மையான கல்லை கொண்டு அறுத்து தான் பிரசவம் பார்த்த நிகழ்வை அவரே பகிர்ந்திருக்கிறார்.
பச்சிளம் குழந்தையுடன் தனது அம்மாவின் ஊருக்கு நடந்தே சென்றுள்ளார் சிந்துதாய். ஆனால், பிறந்ததில் இருந்தே இவரை பிடிக்காத தாய், சிந்துதாய்க்கு தங்க இடமில்லை என்று கூறி அனுப்பிவிட்டார்.
இதனால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரயில் நிலையம் சென்ற இவர், அங்கு பிச்சையெடுக்க ஆரம்பித்தார். நாளடைவில் தனது குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் ரயில் நிலையத்தில் இருந்த அனாதை குழந்தைகளுக்காகவும் சேர்த்து பிச்சையெடுக்க தொடங்கினார்.
ஆதரவற்ற குழந்தைகள் அனைவருக்கும் தானே தாயாக முடிவு செய்தார். தான் பெற்ற ஒரு குழந்தையை ஸ்ரீமந் டக்டு ஷேத் ஹல்வாய் என்ற டிரஸ்ட்க்கு தானமாக கொடுத்தார்.
தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அர்பணித்துக் கொண்டார் சிந்துதாய். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இன்று இவருக்கு 207 மருமகன்கள், 36 மருமகள்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள்.

தான் வளர்த்த குழந்தைகளை வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக உருவாக்கியுள்ளார் சிந்துதாய். இவருக்கு பிறந்த மகள் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர் வளர்த்த குழந்தை ஒருவர் இவரது வாழ்க்கை குறித்தே பிஎச்டி படித்து வருகிறார்.
இதுவரை சிந்துதாய் 273க்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கியுள்ளார். விருதுகளுடன் சேர்த்து கொடுக்கப்படும் பணத்தை கொண்டு தான் வளர்க்கும் குழந்தைகளுக்கான வீடுகள் கட்டியுள்ளார்.
இவரது கணவர் தனது 80வயது வயதில் மீண்டும் இவரை தேடி வந்தார். தான் செய்த தவறை எண்ணி வருந்தி மன்னிப்புக் கேட்டார். தான் தத்தெடுத்து வளர்க்கும் மற்ற குழந்தைகளை போலவே, அவரையும் தத்தெடுத்துக் கொண்டார்.
சிந்துதாய் இதுவரை 84 கிராமங்களின் புனர்வாழ்வுக்காக போராடியுள்ளார்.
2010ல் சிந்துதாய் பற்றிய திரைப்படம் ஒன்று வெளியானது. இந்த படம் லண்டன் திரை விழாவில் திரையிடப்பட்டது.

http://news.lankasri.com/women/03/178062?ref=ls_d_lifestyle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக