தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, May 15, 2018

எமது இந்து மதம் பகுதி 1


தென்னாடுடைய சிவனே போற்றி! – ஒரு விளக்கம்

தற்போது இந்து மதத்திலிருந்து வேறு ஒரு மதத்துக்குப் பாய்ந்த சிலர் தம் தமிழ்ப் புலமையை வைத்துக் கொண்டு எமது மதக் கருத்துக்களில் தாமும் உடன்படுவது போலப் பாவனை காட்டி எமது மதத்தைக் குறுகிய வட்டத்துக்குள் நிறுத்த ஆசைப்படுகின்றார்கள்.

தென்னாடுடைய சிவனே என்னாட்டவர்க்கும் இறைவன் என்று மாணிக்கவாசகர் சொன்னதை இரண்டாகப் பிரித்து தென்நாட்டிலே சிவன் என்ற பெயராலும் பிறநாடுகளிலே சிவன் என்ற பெயரைத் தவிர்த்து இறைவன் என்று பொதுப்பெயராலும் கடவுளை சொல்லி கொள்வதை மாணிக்கவாசகர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார் என்ற பொருள்படும்படி அவர்கள் உரையாற்றி வருகின்றார்கள்.

மணிவாசகர் தென்நாட்டைச் சூழ அருகில் இருந்த நாடுகளைக் கணக்கில் எடுத்து இந்தக் கருத்தைச் சொன்னாரா பிரான்சு ஜேர்மனி இங்கிலாந்து போன்ற நாடுகளையும் சேர்த்துக் கொண்டாரா என்பது கூடத் தெளிவாக இல்லாத போது மரம் தெரியாதவர்களுக்கு இலை பிடுங்கிக் காட்ட ஆசைப்படுகின்றார்கள். நடக்கட்டும்!

இதிலே உள்ள விபரீதம் என்னவென்றால் கடவுள் தென்நாட்டிலே சிவனாகவும் பிறநாட்டிலே இன்னொரு தெய்வமாகவும் எண்ணப்படுவதை திருவாசகம் ஆதரிக்கின்றது என்று காட்டி இறுதியில் சிவனை வணங்கினால் என்ன பிற கடவுளை வணங்கினால் என்ன எல்லாம் ஒன்றுதான் என்று மாணிக்கவாசகர் நினைத்தார் என்று நிறுவ இவர்கள் முயற்சி செய்கின்றார்கள். 

இந்துக்களாகிய நாம் இந்தப் பசப்பு வார்த்தைகளுக்கு அடிபணியாது தென்நாடுடைய சிவன்தான் எல்லா நாட்டவர்க்கும் இறைவன் என்று மணிவாசகர் சொன்னார் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். 

மாணிக்கவாசகரின் எண்ணக் கருத்தினை மாற்றி அதை இன்னொரு மதத்தினர் எங்களுக்கே உபதேசம் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. திருவாசகத்துக்கு இசையமைக்கப் பாடுபட்டார்கள் என்ற வார்த்தைகளுக்கெல்லாம் இங்கே இடமில்லை. 

தனது பாட்டை பிற்காலத்தில் தங்களுக்கு ஏற்ற மாதிரி எப்படியெல்லாம் வளைக்கப் பார்ப்பார்கள் என்று தெரிந்து கொண்டுதான் தான் திருவாசகத்திலே மணிவாசகர் ஒரு பாட்டுச் சொல்லியிருக்கின்றார். 

"புற்றில்வாழ் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி 
மற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென நினைத்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே"

இந்தப் பாட்டிலே மாணிக்கவாசகர் நான் புற்றிலே வாழும் பாம்புக்கும் பயப்படவில்லை. பொய்யை மெய்போலப் பேசும் பிறருக்கும்; பயப்படவில்லை ஆனால் இன்னொரு தெய்வம் இருக்கின்றது என்று நம்பிக் கொண்டு எமது சிவனைப்பற்றி விமர்சனம் செய்யும் அறிவில்லாதவர்களைக் காணும் போது தான் பயந்து சாகின்றேன் என்றார் . அப்பவே அவருக்கு இந்த மதத்திருடர்களின் திருகுதாளம் தெரிந்திருக்கின்றது. 
அவர் மந்திரியாக இருந்தவரல்லவா?

இரா.சம்பந்தன்

No comments:

Post a Comment