தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, October 9, 2017

நல்லூர் கந்தன் ஆலயம் இருப்பது முஸ்லிம்களின் மையவாடியிலாம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அமைந்திருக்கும் இடம் ஆலயம் அமைக்கப்படுவதற்க முன்னர் முஸ்லிம்களின் இறந்த சடலங்களை அடக்கம் செய்யும் மையவாடி என தற்போது பேசப்படுகிறது.
இலங்கையின் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோயில் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் பகுதியில் இமைந்துள்ளது.
இது 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இது இருந்துள்ளது. நல்லூர் ஆலயத்தின் தோற்றம் தொடர்பில் சரியான விபரங்கள் இல்லையெனினும் யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக  இருந்ததாக  வரலாறுகள் சொல்லுகின்றன.
15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டே சிங்கள அரசின் பிரதிநிதியான பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட புவனேகபாகு எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான செண்பகப் பெருமாள் என்பவனால் கட்டப்பட்டதென சிலர் கூறுகிறார்கள்.
யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவென்று போத்துக்கீசருடைய பதிவுகள் சொல்லுகின்றன. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா 1620 இல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான் என்றும் இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகவும் இன்னொரு கதை கூறப்படுகிறது.
அத்துடன் குறித்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர் இதனைத் தாங்கள் சார்ந்த புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658–1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகின்றது.
காலப்போக்கில் தற்போது நல்லூர்க் கந்தன் எழுந்தருளியிருக்கும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டதாக வரலாறுகள் சொல்லிச் சென்றுள்ளன.
இவ்வாறு தற்போது முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம் முன்னாள்களில் முஸ்லிம் மக்கள் தமது இறந்தவர்களின் உடலங்களை புதைக்கும் மையவாடியாக இருந்ததாக சொல்லப்படுகின்றது.
இறந்த ஆத்மாக்கள் உறைவிடங்களில் ஒருவித ஈர்ப்புத் தன்மை இருப்பது இயல்பானது என விஞ்ஞானம் சொல்லியுள்ளதாக பேசப்படுகிறது.அப்படிப்பார்த்தால் எச்சமயங்களுக்கான ஆலயங்களானாலும் அங்கு மனிதர்களை அதிகளவில் ஈர்க்கப்படுகின்றனர். எமது நல்லூர்க் கந்தனும்  உலகிலுள்ள அத்துனை மனிதரையும் ஈர்த்தக்கொண்டுள்ளார்.
ஆகவே வரலாற்று ரீதியில் சொல்லப்படும் இந்த கருத்து நால்லூரானின் அருப்பிடத்திற்கும் பொருந்துவதாகவே உள்ளது.
எது எவ்வாறாயினும் இன்று எமது நல்லூர் கந்தன் உலகின் தலைசிறந்த புனிதத் தலம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!

No comments:

Post a Comment