தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, October 20, 2017

தீபாவளி கொண்டாடுவது தமிழர் தன்மானத்துக்கு ....தன்மானம்??!!தமிழருக்கு??!!


------------------''#தீபா #வலி''---------------------
தாயகத்தில் இருக்கும் போது
தீபாவளியினை......
💥ஏன் கொண்டாடுகின்றோம் ?
💥எதற்காக கொண்டாடுகின்றோம் ?
💥எப்போதிலிருந்து கொண்டாடுகின்றோம் ?
💥எப்படி எமக்குள் கொண்டு வரப்பட்டது ?
இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் கொண்டாடியது போலவே இப்பவும் ,எப்பவும் எல்லோரும் இருக்க வேண்டும் என்பதான போக்கு ஏற்கத்தக்கதல்ல.
💥தீபாவளி #வடநாட்டான் பண்டிகை , தமிழ் இலக்கியங்களில் அதாவது சங்ககால இலக்கியங்களில் ஏதாவது ஒன்றில் தீபாவளி என்பதனை பற்றி சொல்லப் பட்டிருக்கின்றதா ?
சுற்றிக்காட்டுங்கள் தமிழ் #பண்டிதமணிகளே ,#பக்தகோடிகளே ..
தமிழனுக்கு என்று பல கொண்டாட்டங்கள் ,பண்டிகைகள் அவன்சார் #வாழ்க்கைச்சூழலையும், தங்கள் #பழக்கவழக்கங்களையும்அடிப்படையாகக் கொண்டுதான் கொண்டாடப்பட வேண்டும் .
தமிழர்கள் எதையும் சிந்தித்து எது சரி, எது பிழை, எது நல்லது, எது கெட்டது என்று முடிவு செய்வதில்லை. ''*அப்பன் வெட்டிய கிணறு உப்புத் தண்ணீர் என்றாலும் அதையே குடித்துக் கொண்டு உயிர் வாழ விரும்புகிறார்கள்*''.கொண்டாட்டங்கள் முக்கியம் காரணங்கள் முக்கியமில்லை என்பதுதான் உங்களை போன்ற புத்திஜீவிகள் என்று சொல்லிக் கொள்வோரின் கருத்தாக இருக்கிறதோ!!!
தமிழ் மக்களின் உண்மையான கொண்டாட்டத் தேவைகளை அங்கீகரித்து ..,திணிப்புகளை தகர்த்து அவர்களோடு பங்கேற்று, இயற்கையின் உண்மைகளையும், சமுதாய நிலைமைகளின் அடிப்படைகளையும் எங்களுக்காகவே உண்மை அடையாளங்களுடன் வகுக்கப்பட்ட கலை,கலைச்சாரங்களையும் எம்மவர்களின் #விழுமியங்களையும் காப்பாற்றி எம்மவர்கள் அனைவரும் பகுத்தறிவுடன் செயல்படப்போகும் காலம் எப்போவரும் என ஏங்கி நிற்போரில் அடியேனும் ஒருவன் .
தன்னுடைய இனத்தவனை அழித்த நாளினை கொண்டாடும் ஒரே இனத்தவர் தமிழர்களே . தமிழர்கள் தீபாவளியை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தி ஊடகங்கள் அதனைப் பெரிது படுத்துகின்றன. #வணிகர்கள் விற்பனையை அதிகரிக்க தீபாவளியைப் பயன்படுத்துகிறார்கள். #பகுத்தறிவு..,#விழிப்புணர்வு என்பது வெறும் பேச்சுக்காக மட்டுமே என போய்விட்டதோ !!! #நம்மவர்_தமிழர் தொலைக்காட்சி என தம்பட்டமடிக்கும் புலம்பெயர் ஊடகங்களுக்கு ???
600 / 700 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலங்களில் #வைணவ #நாயக்கமன்னர்களால் திணிக்கப்பட்ட தீபா#வலி இன்னும் மற்றைய தமிழ் அடையாள முறைமைகள் கொண்ட கொண்டாட்டங்களை மேவி தமிழர்களிடையே தலை விரித்தாடுவதை உணராமல் பெரும் #தீர்க்கதரிசிகள் போல் நியாயம் கற்பிக்காதீர் என்பது அடியேன் போன்ற பலரது தாழ்மையான கருத்து .
நீங்கள் இந்துவா ? இல்லை சைவரா? என்பதனை உண்மையுடன் முடிவு செய்யுங்கள் . இயற்கை நிகழ்வுகளில் காணும் அளப்பரிய சக்தியின்
வெளிப்பாட்டில் அச்சம் தோன்ற இயற்கையினை தமிழன் வழிபடலானான் . அதன்பின் காவல் தெய்வ / சிறுதெய்வ வழிபாடு .அதன் பின்பே சைவனான் . ஆனால் நாம் யார் ? நாம் இந்து என்று சொல்வதை / சொன்னால் "பெரும்பான்மை சமூக இந்துக்கள்" ஏற்பார்களா ? அப்படி ஏற்றவர்களாயின் முள்ளிவாய்க்காலில் மொத்தமாய் இறந்தோரில் 90% மேற்பட்டவர்கள் சைவ மதத்தவர்கள் அழித்தொழிக்கப்பட்ட வேளைதனில் இந்திய(வட) இந்து அமைப்புகள் எங்கே போயின . நாம் நாமாக வாழ்ப் பழகிக்கொள்வோம் எமது அடுத்த சந்ததிக்காவது உருப்படியான வழிமுறைகளை எம் அடையாளங்கள் மட்டும் சார்ந்து விட்டு செல்வோம் .
தமிழர்களின் வாழ்க்கைச் சூழலையும், அவர்களின் பழக்கவழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் எந்த பண்டிகளைகலோ /கொண்டாட்டங்களோ கொண்டாடப்பட வேண்டும் .
தமிழ் #பேராசான் / #பேரசன் இராவணாரை கொன்று வெற்றிவாகை சூடியதையே இராவணவத திருவிழா செய்து குஜராத்திகளும் .,பல வட நாட்டவர்களும் தமது பெரும் திருநாளாகவும் ., அவர்களுடைய புதுவருடமாகவும் கொண்டாடுகின்றனர் . நாமும் இன்னமொரு தமிழ்பேரசன் நரகா சூரரை (வீரனை ) திருமாள் கொண்டொழித்தார் என அவர்கள் எமக்குள் திணிப்பாக வடவர்களும் ,வைணமும் புகுர்த்தியதை கொண்டாடுகின்றோமே ..இதனை அவர்கள் இன்றைய காலங்களில் கைகொட்டி சிரிக்கின்றார்கள் என்பதனை எத்தனைபேர் புரிவீர்கள் ???
இப்படியே தமிழ்சார் #பூர்வீகங்கள் காலம் காலமாக வெவ்வேறு வடிவங்களில் அழிக்கப்படும்போது கைகட்டி வேடிக்கை பார்க்க போகிண்டீர்களோ . சிந்திப்போம் .செயல்படுவோம் .முடிந்தவரை எம் அடையாளங்களை ,விழுமியங்களை காப்பாற்றுவோம் .
::((( யோ .தே ))) --- #வட்டூரான் 🐣....
💥மேலும் சில குறிப்புகள். 💥
****************************
மட்டக்களப்பில் நான் பிறந்த காலங்களில் 1940 களில் இற்றைக்கு 77 வருடங்களுக்கு முன்னர் தீபாவளியை யாரும் கொண்டாடவில்லை
நாங்களும் வீட்டில் இதனைக் கொண்டாடியதாக ஞாபகம் இல்லை
எமக்கு அன்று கொண்டாட்டம்,சித்திரைமாதப் புது வருடம்தான்.
அன்றுதான் எங்கள் வீட்டில் பலகாரம் சுடுவார்கள்
/முதல் நாளிரவு நான்கைந்து குடும்பங்கள் சேர்ந்து பலகாரம் சுட்டு அதனைத் தமக்குள் பகிர்ந்து கொள்வார்கள்
குடும்பங்களின் விழா அது. கிராமங்களின் விழா அது.
புது உடுப்புகளை காலையில் முதலில் தென்னம் பிள்ளைகளுக்கு உடுத்திவிடச் சொல்லுவார் அம்மா.
தென்னம்பிள்ளைகள் அணிந்த உடுப்பைத்தான் நாம் பின்னர் அணிவோம்
இயற்கையை நேசித்த மனிதர்கள் அன்று
சித்திரை நாள் எஙக்ளுக்குப் பெரும் கொண்டாட்ட நாள்
தைப் பொங்கலும் கொண்டாட்ட நாள்தான்.
அதனை விவசாயிகள் கொண்டாடுவர்.ஏனையோரும் வீட்டில் பொங்கி மகிழ்வர்.
ஆனால் சித்திரை வருடமளவு அது அன்று பெரும் கொண்டாட்டமில்லை.
சின்ன வயதில் தமிழ் நாட்டிலிருந்து
கல்கி தீபாவளி ஆண்டுமலர்,
ஆனந்த விகடன் தீபாவளி ஆண்டுமலர்
கலைமகள் தீபாவளி ஆண்டுமலர்
அமுதசுரபி தீபாவளி ஆண்டுமலர்
எனச் சில தீபாவளி மலர்கள் பள பளப்பான தாளில் கவர்ச்சிகரமான வர்ணப்படங்களுடன் பெரிய பெரிய அளவில் ஆண்டு தோறும் தீபாவளி நாளில் வெளிவரும் அவற்றின்மூலம்தான் தமிழகத் தீபாவளி எமக்கு அறிமுகமாகியதாக ஞாபகம்.
அதன்மூலம்தான்
தலைதீபாவளி,
கங்காஸ்னானம்.
அத்திம்பேர்.
தீபாவளிச் சீடை,முறுக்கு
.விசிறியச் சுழட்டும் குடும்பிவைத்த பூணூல் போட்ட தாத்தாமார்.
,மடிசார்வைத்த பெண்கள்
எனப் பல தீபாவளி சார்ந்த சமாசாரங்கள் சிறுவயது மனதில் படிய ஆரம்பித்தன...
* .......................................*
💥தீபாவளி என்பது வடநாட்டு மார்வாடிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் "புதுக்கணக்கு புத்தாண்டுப் பிறப்பு விழா". தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை”” எனப் பேராசிரியர் #சைவப்பெரியார் அ.கி. #பரந்தாமனார் தாமெழுதிய “மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு”” என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்💥
.................................
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு
நரகன் என்பவன் நல்லனா தீயனா
அசுரன் என்றவனை அறைகின்றாரே
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே
இப்பெயரெல்லாம் யாரைக் குறிப்பது
இன்றும் தமிழரை #இராக்கதர் எனச்சிலர்
பன்னுகின்றனர் என்பது பொய்யா
இவைகளை நாம் எண்ண வேண்டும்.
எண்ணாதெதையும் நண்ணுவதென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொளவேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும்பாகாது
‘உனக்கெது தெரியும், உள்ள நாளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா
என்றுகேட்பவனை, ‘ஏனடா குழந்தாய்
உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று
கேட்கும் நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும் நாள் மானம் உணருநாள் இந்நாள்.
#தீவாவளியும்_மானத்துக்குத்_தீபாவாளி ஆயின் சீ என்று விடுவீரே
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,............
..
💥ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி” என்று சைவத் தமிழ் பெரியார் மறைமலை அடிகள் தாம் எழுதிய “தமிழர் மதம்” என்ற நூலில் எழுதியுள்ளார்.💥
#திணிப்பு_திரிபு_புனைவு.....என.இன்றுவரை எம்மவர்கள் மேல் தொடர்கதை....🔥

No comments:

Post a Comment