தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

கண் பார்வை இழப்பை தடுக்க: காலையில் 5 நிமிடம் ஒதுக்குங்கள்!

கண் பார்வை தொடர்பான பிரச்சனைகளை தடுத்து கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் எளிமையான சில கண் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
பாமிங் (Palming)

கம்ப்யூட்டர் டேபிளின் மீது முழங்கைகளை ஊன்றி, உள்ளங்கைகளை கண்களின் மேல் குவித்தபடி வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் உள்ளங்கைகளை கண்களுக்கு மேல் பொத்திப் பொத்தி எடுத்தால், கண்களின் களைப்பு நீங்கும்.


சன்னிங் (Sunning)

இப்பயிற்சியை இளம் காலை அல்லது இளம் மாலை வெயிலில் மட்டுமே செய்ய வேண்டும். இப்பயிற்சியை செய்யும் போது, கைகளால் கண்களை லேசாக மூடியபடி இளம் வெயிலைப் பார்க்க வேண்டும். ஆனால் இதை நீண்ட நேரம் செய்யக் கூடாது.


ஷிஃப்டிங் (Shifting)

இப்பயிற்சியை கண்களைத் திறந்தபடி அல்லது மூடிக்கொண்டு செய்யலாம். அதாவது, முகம் மற்றும் கழுத்தை திருப்பாமல், கருவிழிப் பகுதியை மட்டும் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் நகர்த்திப் பார்க்க வேண்டும்.

அதேபோல் கண்களை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும், வட்டவடிவில் அனைத்து திசைகளிலும் சுழற்றி இடவலமாகவும், வலஇடமாகவும் கண்களை சுழற்றி பார்க்க வேண்டும்.

இதனால் கண்களுக்குள் உள்ள நுண்ணிய தசைகள் உறுதியாகி, கண்களில் ரத்த ஓட்டத்தை அதிகமாகும்.


கண்பார்வை குவிக்கும் பயிற்சி

இப்பயிற்சியானது அருகில் உள்ள ஒரு பொருளை சில நொடிகள் உற்றுப் பார்க்க வேண்டும். பிறகு தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பார்த்து, கழுத்துப் பகுதியானது பார்வைக்குச் சமமான நிலையில் இருக்க வேண்டும். முதலில் அருகிலுள்ள பொருளைத் தான் பார்க்க வேண்டும்.

கண்களுக்கான மசாஜ்

கண்களை மூடிக் கொண்டு மென்மையாக இரண்டு விரல்களால் வட்ட வடிவில் மசாஜ் செய்யலாம். அதேபோல கீழ் இமையின் அருகில் விரலை வைத்து மேல் நோக்கி மகாஜ் செய்து விடலாம்.


ஓர் இடத்தில் கற்பனையாக எட்டு என்கிற எண்ணை பெரிதாக எண் வடிவில் எழுதியிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு. அந்த வடிவத்தின் மீது பார்வையைப் பதித்து திரும்பத் திரும்ப எட்டு வரைவது போன்று செய்ய வேண்டும்.
http://www.manithan.com/fitness/04/144183

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக