தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

மலச்சிக்கலை போக்கும் காய்: உடனடி பலன் கிடைக்கும்

பழங்கால மருத்துவத்தில் பயன்படும் கடுக்காய் அதிக மருத்துவ தன்மை கொண்டது.
கடுக்காயை எப்படி பயன்படுத்த வேண்டும்?
  • 1/2 தேக்கரண்டி கடுக்காய் தூளை மோரில் கலந்து தினமும் 2 வேளைகள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு உடனடியாக நீங்கும்.
  • கடுக்காயின் தூளை 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து, வெந்நீரில் கலந்து 7 நாட்களுக்கு இரவில் மட்டும் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் குணமாகும்.
  • கடுக்காய் தூளை உப்புடன் சரிபாதி அளவு சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால் ஈறுகளில் உள்ள வலி, பல்வலி, பற்கள், ஈறுகளில் ரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
மலச்சிக்கல் நீங்க மற்றொரு முறை?
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவை கலந்த திரிபலா சூரணத்தை வெந்நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் புளிச்ச ஏப்பம், செரிமானப் பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகள் அனைத்தும் குணமாகும்.
http://news.lankasri.com/medical/03/131098

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக