தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

லட்சக்கணக்கில் தமிழர்கள் வாழ்ந்து வரும் ரியூனியன் தீவு

தமிழர்கள் பிரித்தானியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள் என நாம் அறிவோம்.
ஆனால், நம்மில் பலரும் அறியாத கிழக்கு ஆப்ரிக்கா பகுதியில் மொரிசியஸ் அருகே ரியூனியன் என்ற தீவில் இன்றும் பல லட்சம் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த தீவின் மொத்த பரப்பளவே 2500 கி.மீட்டர் சதுர அடிகள் தான்.
2012-ன் மக்கள் தொகை கணக்களவு படி இந்த தீவில் ஏறத்தாழ 8.4 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 2 லட்சம் பேர் தமிழர்கள் என கூறப்படுகிறது.
பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இத்தீவில் மக்கள் தற்போது மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
ஆனால் 180 ஆண்டுகளுக்கு முன்னர் புதுச்சேரி பிரான்ஸுக்கு அடிமையாக இருந்தது. அப்போது புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியிலிருந்து ஏஜண்டுகள் மூலம் பலர் ரியூனியன் தீவுக்கு கரும்பு தோட்ட பணியில் ஈடுபட அழைத்து செல்லப்பட்டனர்.
இங்கு ஆரம்ப காலத்தில் அடிமைகளாக இருந்த தமிழர்கள் பிறகு பிரான்ஸ் குடியுரிமை கிடைத்த பின்னர் கவுரவமாக நடத்தப்பட்டனர்.
இங்கு வாழ்ந்து வரும் தமிழர்கள் தைப்பூசம், பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.
http://news.lankasri.com/othercountries/03/130290

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக