தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, August 18, 2017

இதிகாசங்கள் சொல்லும் மகாபாரதம் நிகழ்ந்த இடங்கள் எங்குள்ளது என்று தெரியுமா?

முற்கால இந்தியா என்று சொல்லப்படும் பகுதிகளான மகாராட்டிரதேசம், திராவிடதேசம், சோழதேசம், சிம்மளதேசம், பாண்டியதேசம், கேரளதேசம், கர்னாடகதேசம் உள்ளிட்ட 56 தேசங்களாக இருந்தது.
இதில் சௌராட்டிர நாடு என்பது தற்கால குஜராத்து மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள சௌராட்டிர தீபகற்பம் எனும் கத்தியவார் தீபகற்ப பகுதியோகும்.
பண்டைய பாரத நாட்டின் மையப்பகுதியிலும் மேற்கு பகுதியிலும் யது குலம் எனப்படும் யாதவர்கள் ஆண்ட பகுதிகளான துவாரகை, மற்றும் ஆனர்த்த தேசம், லாட தேசம் சௌராட்டிர நாட்டில் உள்ளது.
சௌராஷ்ட்டிரம் யது குலத்தினர் ஆண்ட பிற நாடுகள், மதுரா, சேதி நாடு, தசார்ன நாடு, சூரசேனம், விரஜ நாடு, மகத நாடு, குந்தி நாடு, அவந்தி நாடு, மாளவம், ஹேஹேய நாடு மற்றும் விதர்ப்ப நாடு ஆகும்.
கத்தியவார் தீபகற்பத்தில் அமைந்துள்ள மேற்கு குஜராத்து பகுதியை இன்றளவும் சௌராஷ்ட்டிரம் என்றே அழைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் வாழும் மக்கள் தங்களை சௌராஷ்ட்ரீகள் என்றே அழைத்துக் கொள்கிறார்கள்.
சௌராஷ்ட்ரதேசத்தின் நிலப்பரப்பு முக்கடல்களால் சூழப்பட்டதால் இதனை சௌராட்டிர தீபகற்பம் அல்லது கத்தியவார் தீபகற்பம் என்றழைக்கப்படுகின்றது.
மகாபாரதத்தில் சௌராட்டிர நாடு
சகாதேவனின் படையெடுப்புகள்
மகாபாரதம், சபா பர்வம், அத்தியாயம் 30-இல் தருமரின் ராஜசூய யாகத்தின் பொருட்டு சகாதேவன் பௌரவ நாட்டை வென்று, பின் சௌராட்டிர நாட்டு யாதவர்களின் ஒரு பிரிவினரான விருஷ்ணிகள் ஆண்ட துவாரகை நாட்டின் மீது போர் தொடுத்தான். ஆனால் துவாரகை நாட்டு மன்னன் உக்கிரசேனர் சகாதேவனுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டான்.
குருச்சேத்திரப் போர்
மகாபாரதம், பீஷ்ம பர்வம், அத்தியாயம் 20-இல் சௌராட்டிர நாட்டின் யாதவகுலத்தின் உட்குலங்களான விருஷ்ணிகுல மன்னர், போஜகுல மன்னர், மற்றும் குந்தி குல மன்னர் ஆகியவர்கள் சௌராட்டிர நாட்டின் தலைமைப் படைத்தலைவர் கிருதவர்மன் தலைமையில் நாராயணீப்படை எனும் பெரும்படையுடன் கௌரவர் படையில் சேர்ந்து குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்டனர். ஆனால் கிருஷ்ணரும் சாத்தியகி மட்டுமே பாண்டவர் அணியில் சேர்ந்தனர்.
அருச்சுனனின் படையெடுப்புகள்
தருமரின் அசுவமேத யாகத்தின் பொருட்டு அருச்சுனன் யாக குதிரையுடன் ஆந்திரர்களின் நாட்டு வழியாக சென்று திரும்புகையில் சௌராட்டிர நாட்டின் பிரபாச பட்டினம் (சோமநாதபுரம் (குசராத்து)) கடற்கரையில் புனித நீராடிவிட்டு, விருஷ்ணிகள் (யாதவகுலத்தின் ஒரு பிரிவினர்) ஆண்ட துவாரகை நகரை அடைந்தான். அப்போது யாக குதிரையை துவாரகை நாட்டு விருஷ்ணி குல வீரர்கள் கட்டிப் போட்டனர். இதை அறிந்த துவாரகை நாட்டு மன்னர் உக்கிரசேனர், பாண்டவர்கள் நமது உறவினர் என்பதால் யாக குதிரையை விட்டு விடச் சொன்னார்.
- One India
http://news.lankasri.com/history/03/130667?ref=right_related

No comments:

Post a Comment