தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

உங்களை பற்றி தெரிந்து கொள்ள உங்கள் கட்டை விரல் போதுமே!

கையில் இருக்கும் கட்டை விரலை மடக்கும் விதத்தை வைத்தே நமது குணாதிசயத்தை கணிக்க முடியும்.
இது நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
விரலை மேலே வைத்தல்
இப்படி கட்டை விரலை மடிப்பவர்கள் ஆற்றல் மிகுந்தவர்களாகவும், பல புதிய விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.
பொதுநல விரும்பி, கனிவான நபர், சுற்றியிருப்பவர்களை ஈர்ப்பது போன்றவை இவர்களின் குணாதிசயங்களாக இருக்கும்.
விரலை உள்ளே வைத்தல்
இப்படியானவர்கள் நிறைய அரட்டை அடிப்பார்கள். ஆனால் நண்பர்களை உருவாக்கி கொள்வதில் சிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.
துல்லியமாக பேசுவது, சரியான முடிவுகள் எடுப்பது, எல்லா பிரச்சனையிலும் அதன் வேர் எங்கிருக்கிறது என அறியும் திறன் ஆகியவை இவர்களின் சிறப்பாகும்.
விரலை வெளிப்புறம் வைத்தல்
நடைமுறைக்கு ஏற்றவாறு சிந்திப்பது, செயலை வேகப்படுத்தும் இயல்பு ஆகியவை இவர்களின் மதிப்பை உயர்த்தும்.
தோல்வியின் மீதான பயம் சில சமயங்களில் இவர்களை தைரிய முடிவு எடுப்பதை தடுக்கும்.
விரலை மேல் நோக்கி உயர்த்தினால்
இப்படி கட்டை விரலை மடிப்பவர்கள் புத்திசாலியாகவும், பன்முக திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ஒரே நேரத்தில் பல இடங்களில் கால் வைக்க முயல்வது இவர்களின் குணமாகும். ஆனால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதற்கு காரணமாக இருக்கும்.
http://news.lankasri.com/lifestyle/03/130491?ref=right_featured

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக