தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 ஜூன், 2017

வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில்..!


வியப்பூட்டும் #வகையில் #அமைந்துள்ள#மதுரை #மீனாட்சி #அம்மன் #கோவில்..! 
முதலில் இதை தற்செயலாக தான் நாங்கள் கண்டுப்பிடித்தோம் என்பதை பதிவு செய்கிறோம்..! 
கூகுள் வரைபடத்தில் நமது மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு திசையில் இருந்து கோணலாக தான் இருந்தது..! 
போட்டோசாப் மூலம் ஒரு சிறிய சோதனை செய்து பார்த்தோம், அதில் ஒரு அளவியின் (Protractor) படத்தின் உதவியுடன் , எத்தனை டிகிரி கோணலாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டது..!
சரியாக 23.5° கோணலாக இருந்தது , எங்கோ இந்த 23.5° கேள்விப்பட்ட நியாபகம், பூமி 23.5 டிகிரி கோணலாக தான் சுழல்கிறது​..!
இதை அன்றே என் #பாண்டிய மன்னர்கள் கணித்து இருக்கிறார்கள்..!
என்ன தான் கூகுள் வரைபடத்தில் நமது மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு திசையில் இருந்து கோணலாக இருந்தாலும் உண்மையில்,
நமது மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் அனைத்தும் எல்லா திசைகளிலும் சரியாக அமைக்கப்பட்டுள்ளது..!


 மதுரை 360º

Praba Karan தெரிந்த கோவில்கள் ... தெரியாத அதிசயங்கள் ...
1. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.


Gokula Kannanவழிமுறை மிகவும் எளிமையானது ...

கோடை கால (சித்திரை)அதிகாலையில் ஆட்கள் தயாராய் இருக்க வைத்துவிட்டு... 


கிழக்கில் மத்தியில் ஓர் வளையாத கோலை ஊன்றி அதன் நிழல் மீது கயிறு கொண்டு நீட்டி குறியிட்டு திசையைக் கணக்கிட்டால்...

இது தானாய் அமையும்...

இது தான் பட்டறிவு..



Prabhakaran Karunakaran எனது 2012 ஆய்வு - Indian council of Historical Research (ICHR) ஆல் அங்கிகரிக்கப்பட்ட எனது manuscripts ல் தெளிவாக இந்த கோணத்தை பற்றி ஆய்வு செய்து மதுரை நகர் அமைப்பு பற்றி எழுதியுள்ளேன் - எனது பிளாக் nammamaduraiorg.blogspot.in யிலும்இதைப்பற்றி தெளிவாக எழுதியுள்ளேன். இது எனது பல வருட ஆய்வின் வாயிலாக நான் கூறிய கருத்துக்கள் - மேலும் கூடல் என்பதற்கு பெயர் காரணமும் மதுரையின் தொடக்க காலம் , பாண்டியர்களுக்கு முன் யார் ஆண்டார்கள் போன்றவைகள் எனது ஆய்வில் உள்ளது . இந்த ஆய்வு முற்றிலும் எனது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக