தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 ஜூன், 2017

இந்த 4 காரியங்களில் ஈடுப்பட்ட பிறகு கட்டாயம் குளிக்க வேண்டும்.. ஏன் தெரியுமா?

நம் வீட்டில் ஒருசில காரியங்களில் ஈடுப்பட்ட பிறகு கட்டாயம் குளிக்க வேண்டும் என்பார்கள். உதாரணமாக இறுதி சடங்கு சென்று வந்த பிறகு, முடி வெட்டி வந்த பிறகு போன்றவை. இவை எதற்காக உரைக்கப்படுகின்றன? ஏன் நாம் இதை பின்பற்ற வேண்டும்? இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? இதனால் தடுக்கப்படும் தீமை என்னென்ன? வாங்க பார்க்கலாம்...
ஈமச்சடங்கில் உடலில் இருந்து பாக்டீரியாக்கள் அதிகளவில் வெளிவர துவங்கும். இதனால் தான் இறுதி சடங்கில் இருந்து வீடு திரும்பும் போது யாரையும் தொடக் கூடாது, வீட்டில் நுழையாமல், பின்புறமாக சென்று குளித்து வர வேண்டும் என கூருகின்றனர்.
இந்த பாக்டீரியாக்கள் தொற்று எளிதாக வீட்டில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களை அன்றும். இதனால், அவர்கள் எளிதாக கிருமி தொற்று நோய்களால் பாதிக்கப்படலாம்.
சாணக்கியா கூறுவது படி, உடலுறவில் ஈடுப்பட்ட பிறகு தம்பதிகள் கோவிலுக்கு செல்லுதல், பூஜைகளில் ஈடுபடுதல் போன்ற எந்த ஒரு ஆன்மீக செயற்பாடுகளில் கலந்து கொள்ளவும் போன்ற தகுதியற்று போகின்றனர். இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதனால், உடலுறவில் ஈடுபட்ட பிறகு கட்டாயம் குளிக்க வேண்டும்.
உடலுறவில் ஈடுபட்ட பிறகு பெண்ணுறுப்பில் இருந்து குருதி அல்லது ஆணுறுப்பில் இருந்து வெளிவந்த விந்து போன்றவை உடலில் ஒட்டி இருக்க வாய்ப்புகள் உள்ளன.
மேலும், உடலுறவில் ஈடுபட்ட பிறகு அதிக வியர்வை சுரக்கும். இவை யாவும் தூய்மையற்றவை என்பதாலேயே உடலுறவில் ஈடுப்பட்ட பிறகு குளிக்க வேண்டும் என கூறுகின்றனர்.
ஆயில் மசாஜ் செய்த பிறகு கட்டாயம் குளிக்க வேண்டும் என சாணக்கியர் கூற்றில் கூறப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம், வலிமை மற்றும் சருமம் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டுமானால் வாரம் ஒரு முறையாவது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
ஆயில் மசாஜ் செய்தவுடன் சருமத்தில் இருக்கும் துளைகள் விரிந்து, அழுக்கு உடலில் இருந்து வெளியேறும். இதை உடனடியாக போக்க வேண்டும் என்பதாலும், இது உடல் ஆரோக்கியம், சரும புத்துணர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதாலும் தான் ஆயில் மசாஜ் செய்தவுடன் குளிக்க வேண்டும் என்கின்றனர்.
முடி என்பது உடலி இருந்து வெளியேறும் இறந்த செல்கள் தான். முடி வெட்டிய பிறகு அந்த வெட்டிய கூந்தல் உடல் தேகத்தில் ஒட்டியிருக்க வாய்ப்புகள் உண்டு.
இது வீட்டில் அல்லது சாப்பிடும் போது உணவில் கலந்தால் உடல் உபாதைகள் ஏற்படும். அதற்காக தான் முடி வெட்டிய பிறகு குளிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
- See more at: http://www.manithan.com/news/20170607127560#sthash.SQRbFtWw.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக