தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 13, 2017

சிதம்பர இரகசியம்!?


சிதம்பர இரகசியம் என்பதற்கு பலரும் பல கதைகள் இருக்கும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிறைந்துள்ள அதிசயங்களும், ஆச்சரியங்களுமே இதற்கு பதிலாக அமைகின்றன.
அதாவது இந்த நடராஜர் கோயில் அமைந்துள்ள இடமானது உலகின் பூமத்திய ரேகையின் மையப் பகுதி என்று சொல்லப்படுகிறது.
இதுபோல நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் காஸ்மிக் நடனம் என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
மேலும் மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலின் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் உள்ள 9 வாயில்களை குறிக்கின்றது.
பஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில், சரியாக 79 டிகிரி, 41 நிமிடம் கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது.
இன்று கூகுள் மாப் உதவியுடன் வானத்தின் மேலிருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே இந்த துல்லியம் விளங்கும். ஆனால் இது அன்றைக்கே கணிக்கப்பட்டது பொறியியல், புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், இவ்வாலயத்தில் நடனமாடும் நிலையில் காட்சி தருகிறார்.
இதன் காரணமாகவே பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராஜரை வணங்குகின்றனர்.
கோயிலின் கருவறை அமைப்பு தரை மட்டத்திற்கு கீழே பாதாள வெளியில் வீற்றிருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
பொற்கூரை வேயப்பட்ட கனகசபை, பொன்னம்பலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. 28 தூண்களும் 64 + 64 மேற்பலகைகளை கொண்டுள்ளதுடன், இது 64 கலைகளை குறிக்கின்றது.
கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லாமல் இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது.
ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தில் உதவியால் மூச்சு விடுகிறார். எனவே கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21,600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது.
நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜன் என ஆனதாக சொல்லப்படுகிறது..

No comments:

Post a Comment