தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 பிப்ரவரி, 2017

நாக்கின் நிறம் வடிவமே போதும்! உங்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்

ஒருவருடைய நாக்கின் வடிவம் மற்றும் நிறத்தை வைத்தே அவர்கள் எப்படி பட்டவர்கள் அவர்களின் குணங்கள் என்ன என்பதை பற்றி கூறிவிடலாம்.
தடித்த நாக்கு
தடித்த நாக்கை கொண்டவர்கள் அனைத்து விஷயத்திலும் அதிகளவில் கோபம் அடைபவராக இருப்பார்கள்.
மேலும் இவர்கள் அனைத்து விதமான செயல்பாடுகளிலும் விதண்டா வாதம் செய்வதுடன், தன்னுடைய ராஜ்ஜியம் மட்டும் தான் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
மென்மையான நாக்கு
மென்மையான நாக்கைக் கொண்டவர்கள் வெள்ளை மனதை கொண்டவர்கள். அவர்களின் மனதில் பட்டதை பேசும் திறன் கொண்டவராக இருப்பார்கள்.
நீளமான நாக்கு
நீளமான நாக்கை கொண்டவர்கள் தனது வாழ்வின் அனைத்து விஷயத்திலுமே விவேகமாக செயல்படுவார்கள். அதுவே பெண்களாக இருந்தால், அவர்கள் தங்கள் கணவர்கள் மீது அதிக காதல் மற்றும் உண்மையான அன்பை செலுத்துபவராக இருப்பார்கள்.
சிறிய நாக்கு
சிறிய நாக்கை கொண்டவர்கள் மிகவும் அமைதியானர்வகள். மேலும் இவர்கள் குறைவாக பேசும் திறன் கொண்டதால், யாரையும் எதிர்த்து பேசாதவர்களாக இருப்பார்கள்.
வெள்ளை நாக்கு
நாக்கில் வெள்ளை படிந்த ஆண்கள் காதலில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதுவே பெண்களாக இருந்தால், அவர்களுக்கு பிடித்தமானவர்கள் மீது அதிகப்படியான அன்பை செலுத்துபவராக இருப்பார்கள்.
சிவப்பு நாக்கு
ஒருவருக்கு நாக்கு சிவப்பாக இருந்தால், அவர்கள் அனைத்து விஷயத்திலும் ஒரு விதமான கூச்சம் மற்றும் பயந்த சுபாவம் உடையவராக இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக