தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, February 21, 2017

இலங்கை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு : அமெரிக்கா சென்று சாதிக்க காத்திருக்கும் இளம் விஞ்ஞானி

இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் காத்தான்குடி நகரத்தைச் சேர்ந்த இம்ஹாத் முனாப் என்ற மாணவரே குறித்த கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இவர் காத்தான்குடி பிரதேசத்தைச சேர்ந்த் முஹமட் முனாப் மசூதியா தம்பதிகளின் புதல்வர் ஆவார்.
முழு உலகிலும் பரவலாக காணப்படும் இரு பிரச்சினைகளில் ஒன்று கழிவு முகாமைத்துவம், மற்றையது மின்சாரம் தட்டுப்பாடு ஆகும்.
இவ் இரு பிரச்சினைகளுக்கும் தீர்வாக கழிவுகளைக் கொண்டு மின் உற்பத்தியை உருவாக்கும் ஒரு கருவியை குறித்த மாணவன் கண்டு பிடித்துள்ளார்.
தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நடாத்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள் செயற்பாட்டு போட்டியில் அகில இலங்கை ரீதியில் 5ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளான்.
இதற்காக குறித்த மாணவனுக்கு அன்றாட சேதனக் கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கலத்திற்கான சான்றிதழை விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வழங்கி வைத்துள்ளார்.
மேலும் எதிர்வரும் மே மாதம் இன்டெல் நிறுவனத்தினால் அமெரிக்காவில் நடைபெறவுள்ள விஞ்ஞான ஆராய்ச்சிகள் செயற்பாட்டு போட்டிக்கு இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்களை தெரிவு செய்யும் போட்டியில் பங்குபற்றி தனது பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ளார் இந்த இளம் விஞ்ஞானி.

No comments:

Post a Comment