தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, February 23, 2017

64 வருடங்களுக்குப் பிறகு வெளியில் வந்த அரியவகை பாம்பு..!

பிரேசில் காடுகளில் யார் கண்களுக்கும் படாமல் உயிர்வாழ்ந்து வந்த, உலகின் அரிய வகை பாம்புகளில் ஒன்றான போவா பாம்பு, சுமார் 64 வருடங்களுக்கு பிறகு வெளியில் வந்துள்ளது.
குறித்த அரிய வகை போவா பாம்பானது சுமார் 64 ஆண்டுகள் யார் கண்களுக்கும் படாத வண்ணம் வாழ்ந்ததாகவும், பிரேசில் நாட்டின் ரிபெய்ரா பகுதியை சேர்ந்த மக்கள் குறித்த பாம்பினை பிடித்து உள்ளூர் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த போவா பெண் பாம்பின் நீளம் 1.7மீற்றர் எனவும், அதன் எடை 1.5 கிலோவாக இருப்பதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முன்னதாக 1953 ஆம் ஆண்டு குறித்த அரியவகை பாம்புகள் ஆய்வாளர்களின் கண்களுக்கு தென்பட்டுள்ளதோடு, அவை பற்றிய விவரணங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சுமார் 64 ஆண்டுகள் குறித்த பாம்புகள் காடுகளில் தென்ப்படாமலேயே இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பிடிக்கப்பட்ட அரிய பாம்பானது மீண்டும் காட்டில் விடப்பட்டுள்ளதோடு, அந்த பாம்பின் உடலில் தகவலறியும் கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் காடுகளில் அந்த பாம்பு இனம் எவ்வாறு வாழ்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்காணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment