தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, January 19, 2017

இந்த 3 விடயங்களை மட்டும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

திருமணத்திற்கு முன்னர் மற்றும் திருமணத்திற்கு பின்னர். இந்த இரண்டு விதமான வாழ்க்கைகளுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது.
பலரது நிம்மதி திருமணத்திற்கு பின்னர் போய்விடுகிறது. இன்னும் சிலருக்கு திருமணத்திற்கு பின்னர்தான் நிம்மதியே கிடைக்கிறது.
நிம்மதி என்ற உயிருள்ள வார்த்தை தம்பதியினர் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை முறையில் தான் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்ளுங்கள். திருமணத்திற்கு முன்னர் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சில விடயங்கள் உங்களுக்கு மன ஆறுதல் அளித்தாலும், திருமணத்திற்கு பின்னர் நீங்கள் சில விடயங்களை உங்கள் நண்பர்களிடம் முற்றிலுமாக பகிர்ந்துகொள்ளுவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், மன ஆறுதலுக்காக நீங்கள் பகிர்ந்துகொள்ளும் சில விடயங்களே, உங்களின் மன நிம்மதியைம், மண வாழ்க்கையும் கெடுக்கும் வகையில் அமையலாம்.
அப்படி நீங்கள் பகிர்ந்துகொள்ளக்கூடாத 3 விடயங்கள்
கணவன் மனைவி உறவு குறித்த விடயங்கள்
திருமணத்திற்கு முன்னர் உங்கள் நண்பர்களிடம் Sex வாழ்க்கை குறித்து கலந்தாலோசித்திருக்கலாம். இது உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கான ஒன்று அல்லது தகவல்களை அறிந்துகொள்ளவதற்காக இதுகுறித்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கலாம்.
ஆனால், திருமணத்திற்கு பின்னர் உங்கள் மனைவியுடன் உங்களுக்கு இருக்கும் Sex வாழ்க்கை குறித்து, உங்கள் நண்பர்களுடன் அறவே பகிர்ந்துகொள்ள கூடாது. இதுபோன்று நீங்கள் பகிர்ந்துகொள்ளும்போது, வெறும் வாயை மென்றுகொண்டிருப்பவர்களுக்கு, பொறி கொடுத்த கதையாகிவிடும்.
ஏனெனில், உங்கள் உறவு முறை பற்றி அறிந்துகொள்ளும் அவர், உங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கலாம் அல்லது எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து உங்களது மனதை கெடுத்துவிடுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் மனைவியின் அந்தர விடயங்களை அறிந்துகொண்ட, தவறான கண்ணோட்டத்தில் பார்க்ககூடும். இதனால், இதனை பகிர்ந்துகொள்வதை நிறுத்திவிடுங்கள்.
வருமானம் மற்றும் கடன்கள்
உங்கள் கணவரோ அல்லது மனைவியோ எவ்வளவு மாத வருமானம் ஈட்டுகிறார்கள் மற்றும் எவ்வளவு கடன்கள் உள்ளது என்பதை பகிர்ந்துகொள்ளக்கூடாது. அதுமட்டுமின்றி திருமணத்தின்போது உங்கள் மனைவி எவ்வளவு வரதட்சணை கொண்டு வந்தார் என்பது குறித்து பகிர்ந்துகொள்வதும் தேவையற்ற ஒன்று.
உங்கள் வருவாய் அதிகமாக இருந்தால், இதனால் அவர்களுக்குள் எழும் பொறாமை உணர்வு அல்லது ஆடம்பர வாழ்க்கைக்கு உங்களை இட்டுச்செல்லுதல். மேலும் உங்கள் கடன் பிரச்சனை குறித்து அறிந்துகொண்டால், அவர்கள் வாழ்க்கையுடன் உங்களை வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்து உதாசீனப்படுத்துதல் மற்றும் உங்களிடம் இருக்கும் பணத்திற்காக உங்கள் நட்புறவு பராட்டுதல் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
நம்பிக்கை
சில நம்பிக்கைகளை திருமணத்திற்கு பின்னர் நீங்கள் கண்டிப்பான முறையில் கடைபிடித்தே ஆகவேண்டும்.
உங்கள வாழ்க்கை துணை உங்கள் மீது நம்பிக்கையில் சில விடயங்களை பகிர்ந்துகொள்வார். அதனை உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து புறணியாக பேசக்கூடாது. இது ஒரு கட்டத்தில் உங்கள் வாழ்க்கை துணைக்கு தெரியவரும்போது, நீ எல்லா விடயத்தையும் இப்படித்தான் போய் சொல்கிறாயா? என்ற கேள்வி எழுந்து, உறவில் விரிசல் ஏற்படுவதே இதற்கு பதிலாக கிடைக்கும்.
எனவே, உங்கள் வாழ்க்கை துணை கூறிய சில நம்பிக்கையா விடயங்களை வெளியில் சென்று அசைபோட்டுக்கொண்டிருக்காதீர்கள்.

No comments:

Post a Comment