தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, October 18, 2016

பணக்காரராக ஆசையா? அப்போ இந்த ரகசியத்தை தெரிஞ்சிகோங்க!

இன்றைய காலத்தில் யாருக்கு தான் பணக்காரராக வேண்டும் என்ற ஆசை இருக்காது. சமுதாயத்தில் நாம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமானல் கடுமையாக உழைக்க வேண்டும்.
கடுமையான உழைப்பிற்கு பின் நம்முடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள தொழிலின் நுணுக்கங்களை நாம் நன்றாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.
எனவே நம்முடைய வாழ்வில் முன்னேறுவதற்கான மற்றும் வணிகத்தில் தங்களின் இடத்தை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்ற ரகசியத்தை தெரிந்துக் கொள்வோம்!
ஊதியம் மட்டுமே முழுமை அல்ல என்பதை நன்றாக தெரிந்துக் கொண்டு நம்முடைய வணிகத்தை நேர்மையான முறையில் தொடர வேண்டும்.
மேலும் செயலற்ற மூலதனத்தில் இருந்து கிடைக்கும் வருமானம் என்பது உங்களின் செயலாற்றும் மூலதனத்தில் இருந்து வரும் வருமானம் விட அதி விரைவில் உங்களைப் பணக்காரராக மாற்றும் என்று கூறுகின்றார்கள்.
வர்த்தகத்தில் ஈடுபடும் போது, நாம் காலகட்டத்தை பார்க்காமல், காலம் மற்றும் நேரத்தை பயன்படுத்தி வர்த்தகத்தை தொடர வேண்டும். இதனால் நாம் விரைவில் பணக்காரராக மாறலாம்.
நாம் எந்தவொரு செயல்களை புதிதாக தொடங்கும் முன் நமது திட்டங்கள் என்ன என்பதை மறக்காமல் ஒரு நோட்டில் எழுதிக் கொள்ள வேண்டும். வர்த்தகம் செய்யும் போதும் நமது திட்டங்களுக்கு ஏற்றது போல நடைமுறைப்படுத்த வேண்டும்.
நாம் வர்த்தக தொழிலில் ஒருசில பொருட்கள் வாங்கும் போது அதனுடைய விலைகளை நாம் என்றும் பார்க்க கூடாது, சமுதாயத்தில் அந்த பொருளின் மதிப்பு என்ன என்பதை மட்டுமே ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.
சொந்தமான வர்த்தகம் செய்யும் போது, அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்களின் அலுவலகத்திற்கு செய்யும் வேலைகளின் தரத்திற்கு ஏற்ப வருமானத்தை கொடுக்க வேண்டும்.
வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களின் பணத்தைப் பயன்படுத்தி உங்களுக்காக வேலை செய்ய பல மக்களைப் பணியில் அமர்த்தி சொத்து சேர்ப்பது ஒரு உறுதிப்படுத்தப்பட்ட செயல்முறை ஆகும். இங்கு வரிச் சட்டங்கள் தொழில் புரிபவர்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. இதுவே செல்வம் சேர்க்க உதவும் மிகவும் சக்தி வாய்ந்த சூத்திரமாக இருக்கிறது.
ஒரு யோசனையை உங்களிடமே வைத்துக்கொள்வது மற்றும் காகிதத்தில் அதை மாற்றுவதிற்கு இடையே உள்ள வித்தியாசமே ஒரு சிறந்த வெற்றியாளரை ஒரு சராசரி மனிதனிடமிருந்து பிரிக்கின்றது. நீங்கள் உங்களின் வெற்றியைப் பொருளுடன் சமன் செய்ய விரும்பினால் இதுவே உகந்த தருணம். உங்களின் இலக்குகள் அது சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். அதைப் பேப்பரில் எழுதி வைக்க முயற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment