தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 செப்டம்பர், 2016

தானாக சுற்றும் மர்மத் தீவு!

அர்ஜெண்டினாவின் வடகிழக்கு முனையில் அமைந்திருக்கிறது பரானா டெல்டா. இது மிதக்கக்கூடிய சின்னஞ் சிறுதீவு. ’ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியை 6 மாதங்களுக்கு முன்பு அர்ஜெண்டினாவின் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான செர்கியோ நெஸ்பில்லர் கண்டுபிடித்தார்.
வட்டமாக அமைந்துள்ள நிலப்பகுதியைச் சுற்றிலும் 130 அடி அகலத்துக்குத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர்ப் பகுதியும் நிலப்பகுதியும் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள். இயற்கையாக உருவாகியுள்ள இந்த வட்டமான நிலமும் அதைச் சுற்றியுள்ள நீரும் தானாகவே சுற்றி வருகின்றன. வட்டப் பகுதியில் இருக்கும் மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு நகர்ந்துவிடுகின்றன.
இந்த இடம் அற்புதமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது. இந்தத் தண்ணீர் பளிங்கு போலவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அடிப்பகுதி சதுப்பு நிலமாக இருக்கிறது. மேற்பகுதி நிலம் சுழல்கிறது. நீர், நிலம், மண், தாவரம் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்ய வேண்டும். சிலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கும் என்கிறார்கள்.
1473830570-1061
- See more at: http://www.canadamirror.com/canada/69804.html#sthash.RuvPxpqq.SZ0XlKdr.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக