தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, September 8, 2016

மாயம் செய்த மாதவன்

பகவான் கிருஷ்ணன் செய்த திருவிளையாடல்களால்தான் மகாபாரதப்போர் நிகழ்ந்தது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் என்பது உறுதி செய்யப்பட்டபின், துரியோதனன், "எந்த நாளில் போர் தொடங்கினால் வெற்றி கிட்டும்?' என்பதை அறிய சகாதேவனின் வீட்டிற்குச் சென்றான்.
வந்திருப்பவன் தங்களது எதிரி என்பதை யோசிக்காமல் ஜோதிடப்படி ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து, "அடுத்து வரப்போகும் அமாவாசை திதியில் யுத்தம் தொடங்கினால் வெற்றி உறுதி' என்று சொன்னார்.
சகாதேவனிடம் நாள் குறித்துக்கொண்டு வெற்றி உறுதி என்ற மனப்பான்மையில் மகிழ்வுடன் துரியோதனன் சென்றான்.
இந்தச் செய்தியை அறிந்த பகவான் கிருஷ்ணர், "சகாதேவன் குறித்த நாளில் போர் தொடங்கினால் துரியோதனன் வெற்றி பெறுவது உறுதி' என்பதால் அதனை மாற்ற திட்டமிட்டார்.
அமாவாசைக்கு முதல் நாள் காலை நேரத்தில் கிருஷ்ணர், பாண்டவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் வழக்கம்போல் பித்ருக்களுக்கு திதிகொடுக்கும் நதிக்கரைக்கு வந்தார். பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஒரே குழப்பம்! நதிக்கரையில் கிருஷ்ணரின் அழைப்பிற்கேற்ப வேதவிற்பன்னர்கள் வந்திருந்தனர்.
பாண்டவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யத் தொடங்கினார்கள். "நாளைக்குத்தானே அமாவாசை, இன்று ஏன் தர்ப்பணம் செய்யவேண்டும்' என்று யோசித்தப்படி சூரியனும் சந்திரனும் தர்ப்பணம் கொடுக்கும் இடத்திற்கு வந்தார்கள். மேலும் இதை பாண்டவர்களைப் பார்த்துக் கேட்கவும் செய்தார்கள்.
அப்போது அருகிலிருந்த கிருஷ்ண பகவான், ""சூரிய சந்திரர்களே, உங்கள் சந்தேகத்திற்கு தகுந்த பதிலை இதோ.. பக்கத்திலிருக்கும் "போதாயன மகரிஷியிடம் கேளுங்கள். அவர் உங்களுக்கு தகுந்த பதில் சொல்வார்'' என்றார். உடனே சூரிய சந்திரர்கள் அருகிலிருந்த போதாயன மகரிஷியிடம் தங்கள் சந்தேகங்களைக் கேட்டனர். அவர் உடனே ஓர் எதிர் கேள்வி கேட்டார். ""அமாவாசை அன்று நீங்கள் இருவரும் எங்கே இருப்பீர்கள்?'' என்றார்.
""என்ன மகரிஷி? உங்களுக்குத் தெரியாதா? நாங்கள் அமாவாசை அன்று இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து அருகருகில் இருப்போம்'' என்று சூரிய சந்திரர்கள் சொன்னார்கள். உடனே அவர், "இப்போது எப்படி இருக்கிறீர்கள்? ஒன்று சேர்ந்துதானே வந்திருக்கிறீர்கள் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் அமாவாசை. எனவே, இன்று அமாவாசை தானே!'' என்றார் போதாயன மகரிஷி.
இந்த விவரம் தெரியாமல் சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருப்பதை அறிந்த துரியோதனன் அந்த நேரத்தில் போரைத் தொடங்கினான். அதுமுதல் போதாயன கல்பத்தை பின்பற்றுபவர்கள் இரவு பன்னிரண்டு மணிக்கு முன் அமாவாசை வரும் நாள்களில் அன்று காலையே தர்ப்பணம் செய்வார்கள்.
அந்த நாளை, "போதாயன அமாவாசை' என்பர். "போதாயன அமாவாசையை ஏற்படுத்தி பாரதப் போரை வெல்ல வழிவகுத்தவர் ஸ்ரீ கிருஷ்ணர் என்று புராணம் கூறுகிறது.
http://news.lankasri.com/spiritual/03/108877

No comments:

Post a Comment