தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, August 11, 2016

போதிதர்மர்


"மனிதனாய் பிறப்பது வரம் என்றால்.. அதில் தமிழனாய் பிறப்பதே தவம்"

"சீனர்களின் கடவுள் ஒரு தமிழன்"

"போதி தர்மன்"

பிறப்பு : கிபி 475
தந்தை : கந்தவர்மன் என்ற பல்லவ மன்னன்..
தோன்றல் : பல்லவ மன்னன் கந்தவர்மனின் மூன்றாவது மகன் போதி தர்மன் ( ஆதாரம் டான்லின் பதிவுகள் ( Tanlin historical notes) மற்றும் டௌசுவன் வரலாற்றுப் பதிவுகள் ( Dauxuon historical notes) .
பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
தமிழ் பாரம்பரிய கல்வியான தற்காப்பு கலை,மற்றும் மருத்துவத்தை சிறுவயதிலே கற்றுதேர்ந்தார்
பயணம் : 17ம் வயதில் சீன நாட்டுக்கு பயணம்.. புறப்பட்டார். 21ம் வயதில் சீனாவை அடைந்தார்
வாழ்க்கை வரலாறு : சீனாவில் குங்ஃபூ கலையை சீனர்களுக்கு பயிற்றுவித்தார். மருத்துவ பாடங்களும் எடுத்தார். ஆதாரம் : சீனாவில் சாவ்லின் புத்த கோவிலில் உள்ள ( shaolin temple ) கல்வெட்டு .
வாழ்க்கை சாதனை : சீன மத குருமார்களில் கடைசி குருமார் ஆக ( 28ம் குருமார் ஆக ) போதி தர்மன் கருதப்படுகிறார். ( ஆதாரம் – சீன யங்க்சியா பாட்டு )
வாழ்ந்த வருடங்கள் : 75 (கிபி 550 )
இதிலிருந்து போதி தர்மன் என்ற தமிழன் தான் உலகின் சிறந்த தற்காப்பு கலையான குங்க்ஃபூவை சீனர்களுக்கு சொல்லித் தந்தார் என்றும் சீனர்களால் இன்றுவரை தெய்வமாக போற்றப்படுகிறார் என்பதும் தெரிகிறது..


போதிதர்மர் வரலாறு...
போதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ
தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன.

ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை
உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை
சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின்
ஆன்மா என்பது தியானம் தான். எனினும் அவர் குங்ஃபூ
கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில
பின்னணிகள் இருக்கின்றன.
போதிதர்மா பற்றிய
தொன்மையான பதிவுகள்
எதுவும் நம்பகத்தன்மை
வாய்ந்தவையாக இல்லை
என்றே வரலாற்று அறிஞர்கள்
கூறுகின்றனர். அவரைப்
பற்றிய புனைவுகள்
நிறைய பின்னப்பட்டுள்ளன.
குங்ஃபூ கலை பற்றி
அவரின் பெயரால்
அழைக்கப்படும் நூல்களும்
வேறு யாரோ
எழுதியவை என்றே
சொல்லப்படுகின்றன.
போதிதர்மா தன் கைகளால்
நேரடியாக எந்தப்
புத்தகத்தையும் எழுதவில்லை. அவருடைய போதனைகளை
அவரின் சீடர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.
தமிழகத்தில் இருந்து சீனா சென்ற போதிதர்மா மன்னர்
’வூ-டி’யைச் சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக்
கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள
ஷாவொலின் மடலாயத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு
தியானம் செய்துகொண்டிருந்த புத்த பிட்சுக்களைப்
பார்த்தபோது அவருக்குப் பெரிதும் ஏமாற்றமாக
இருந்தது. நாட்பட்ட பட்டினியாலும் தவத்தாலும்
அவர்களின் தேகங்கள் வத்தலும் தொத்தலுமாக இருந்தன.
ஆன்மிகவாதிகள் என்றால் இப்படி சோப்ளாங்கிகளாக இருக்க
வேண்டும் என்று அவர்களின் மனதில் ஒரு தவறான கருத்து
கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை அவர் கண்டார்.
அவர்களின் ஆன்மா ஒளி வீசிக் கொண்டிருந்தாலும் உடல்
படு மோசமாக இருந்தது. போதிதர்மா ஒரு
முழுமைவாதி. உடல் ஆராதனைக்கு உரியது என்னும்
கருத்துடையவர். ஓர் ஆன்மிகவாதிக்கு உடல் உறுதியாக
இருக்க வேண்டும் என்பதை அந்த பிட்சுக்களுக்கு எடுத்துச்
சொல்லி அதற்கான செய்முறைகளை அவர்களுக்கு
வகுத்துக் கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதற்காக
அருகில் இருந்த ஒரு குகையில் ஒன்பது வருடங்கள்
தியானம் செய்கிறார் போதிதர்மா. ஒன்பது
வருடங்களும் அவர் ஒரு சுவற்றைப் பார்த்தபடி அமர்ந்து
தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
ஒன்பது வருடங்கள்
தியானம்
செய்த
போதிதர்மா
அங்கிருந்து
கிளம்பியபோது அந்த இடத்தில் இரும்புப் பெட்டி ஒன்றை
விட்டுச் செல்கிறார். பிட்சுக்கள் அதைத் திறந்து
பார்த்தபோது அதில் இரண்டு கிரந்தங்கள் இருந்தன.

No comments:

Post a Comment