தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

இதைப் படித்த பின் வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க...! பொக்கிஷமா நினைப்பீங்க...

உலகம் முழுவதும் சமையலில் பயன்படுத்தும் ஓர் பொதுவான காய்கறி தான் வெங்காயம். இந்த வெங்காயத்தின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமின்றி, இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

பொதுவாக வெங்காயத்தைப் பயன்படுத்தும் போது, அதன் தோலை தூக்கி எறிந்து விட்டு, அதனுள் உள்ளதை தான் பயன்படுத்துவோம். இந்த கட்டுரையைப் படித்த பின், இனிமேல் அந்த வெங்காயத்தை தோலை நீங்கள் தூக்கி எறியமாட்டீர்கள். ஏன் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வெங்காய அடுக்குகள்
பல அடுக்குகளைக் கொண்டது தான் வெங்காயம். ஆய்வுகளில் வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் இருப்பதாக தெரிவிக்கின்றன. இதனால் இதனை அன்றாட உணவில் சேர்க்கும் போது உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
ப்ரௌன் நிற வெளி அடுக்கு
வெங்காயத்தின் வெளிப்புறத்தில் உள்ள ப்ரௌன் நிற அடுக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமான அளவில் உள்ளன.
வெங்காய தோல்
வெங்காயத்தின் தோலில் உள்ள ஆற்றல்மிக்க நிறமியான க்யூயர்சிடின், தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சக்தி வாய்ந்த மயக்க மருந்து பண்புகள் உள்ளன மற்றும் தூக்கமின்மையை சரிசெய்யும்.
இதர பண்புகள்
வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன.
முக்கியமாக வெங்காயத்தின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையை உள்ளடக்கிய க்யூயர்சிடின், புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழித்து, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
ஆய்வுகளில் வெங்காயத்தின் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்து, குடலியக்கத்தின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், வெங்காயத் தோலில் உள்ள கரையாத நார்ச்சத்து பெருங்குடலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும், pH அளவை சீராக பராமரிக்கும்.
மேலும் வெங்காயத் தோல் கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கும். அவை:
* டைப்-2 நீரிழிவு
* இதய நோய்கள்
* இரையக குடலிய பிரச்சனைகள்
* உடல் பருமன்
* குடல் புற்றுநோய்
எப்படி வெங்காயத் தோலை உட்கொள்ளலாம்?
வெங்காயத்தின் தோலை ஸ்டீயூவ் வடிவிலோ, சூப் வடிவிலோ அல்லது தேநீர் வடிவிலோ எடுக்கலாம். இப்போது நாம் வெங்காய தோல் கொண்டு எப்படி டீ தயாரிப்பது என்று பார்ப்போம்.
வெங்காய தோல் டீ
முதலில் வெங்காயத்தின் தோலை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் கொதிக்கும் நீரை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் கழித்து, அந்நீரை வடிகட்டி, தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் ஒரு கப் குடிக்க வேண்டும்.
குறிப்பு
வெங்காயத் தோலை கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பயன்படுத்தக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக