தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, August 3, 2016

கறுப்புத்தோலை கவர்ச்சி தோலாக கருதும் சாதனை பெண்கள்!


வெள்ளை நிறத்தை விரும்புவது இயல்பான ஒன்றாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், வெள்ளை நிறத்தின் தெகிட்டல் கூட கறுப்பு நிறத்தின் மீது மோகத்தை ஏற்படுத்தும் என்பதை திரையுலகிலும் நாம் பார்க்கிறோம்.
கறுப்பு நிறத்துடனும் பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக பெண்கள் அண்மைக் காலங்களில் அதிகமாக வலம் வருகின்றனர்.
சிவப்பு அழகு தரும் கிரீம் விளம்பரங்கள், மக்கள் மனதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. சிவப்புதான் பெண்களுக்கு சாதிப்பதற்கும் தன்னம்பிக்கைக்கும் உரிய நிறம் என்ற ஒரு மாயையை திணிக்கின்றன.
அது வியாபார யுக்திக்குள் நடக்கின்ற வர்ண சதி. அதனால், கறுப்பு நிறத்துடன் சமுதாயத்தில் வெற்றிமுகம் காட்டும் சில பெண்களை ஒன்று சேர்த்து, ஒரு சமூக அக்கறை பிரச்சாரத்தை நந்திதா தாஸ் செய்திருக்கிறார்.
1. நிகிதா சின்னாரி(வயது-21)
நிதி ஆய்வாளரான இவர், ஒரிஸ்ஸாவில் பெர்ஹாம்பூரில் பிறந்தவர். ஆனாலும், மும்பையில்தான் வாழ்கிறார்.
5 ல் 3 பேர் தங்கள் குழந்தைகளுக்கு சிவந்த நிறத்தை பெற பால், அரிசிமாவு உட்பட அழகு கிரீம்கள் பூசுவதை விரும்புகின்றனர்.
இதனால், தனது சுயமான நிறத்தை இழக்கின்றனர். என் நிறத்தை கேலி செய்தவர்கள், ’காளி’ என அழைத்தவர்கள் உண்டு. அதைக் கேட்டு எனக்கு நிரந்தர வருத்தமில்லை.
எனது ’பிங்க்’ நிறத்தை ஒரு மின்சார கவர்ச்சியாக நினைக்கிறேன் என்கிறார்.
2. மாண்டாவி மேனன்(26):
எடிட்டர் மற்றும் உள்நாட்டு இணை நிறுவனரான இவர் கூறுகையில், ‘நான் ஒரு அழகான தீவிரமான தடகள வீராங்கனை.
எப்போதும் என் மீது சூரிய ஒளிபடும் சூரியன் தோன்றாத நேரத்தை தவிர, என் தோல் நிறத்தை அழகியலாகவே நான் காதலிக்கிறேன்.
நிறுவனங்களில் பதவி உயர்வுகளுக்கு நிறம் ஒரு காரணம் என்பது மேம்போக்கானது. என் வளர்ச்சியில் எனது நிறத்துக்கும் பங்கு உண்டு’ என்கிறார்.
3. மதிகா அலி(28):
இவர் ஒரு மாணவி, நான் அன்பும் அரவணைப்பும் உள்ள குடும்ப சூழலில் வளர்ந்தேன். ஆனால், குழந்தை பருவத்திலிருந்து அம்மா அழகுக்காக எந்த கிரீமும் பயன்படுத்தியதில்லை.
நானும் அதையே தொடர்கிறேன். ஒரு குழந்தைக்கு அதுவே சரியான பராமரிப்பு என்கிறார்.
4. மேகா ரமேஷ்(28):
பிரதி எடுப்பவராக வேலை செய்யும் இவர், நான் புகைப்படக்காரர்கள், மாடல்கள், வடிவமைப்பாளர்கள், நவீனமுடையவர்கள் என பலதரப்பினரையும் சந்திக்கிறேன்.
எல்லோரும் கறுப்பு நிறத்தை ஏற்றுக்கொள்கின்றனர் என்பதைவிட கொண்டாடுகின்றனர். வெள்ளை நிறத்தை சாதாரணமாகவே பார்க்கின்றனர். அது சாக்லேட், கேரமல், இனிப்புவகை போலதான் என்கிறார்.
5. ஷில்பா கொல்லுரு(33):
பிராண்ட் ஆலோசகரான இவர் கூறுகையில், ‘நான் நிறத்தைப் பற்றி துளிகூட யோசித்ததில்லை டெல்லியில் நான் படித்த கல்லூரிக்கு செல்லும் வரை. என்னை அங்கு தாழ்வுபடுத்தினார்கள் என் நிறத்திற்காக மட்டுமல்ல, தென்னிந்தியர் என்பதற்காகவும்.
ஆனாலும், நான் நந்திதாதாஸ், கொங்கனா சென் போல நிறமுடையவளாக என்னை நினைத்து பெருமையே பட்டுக்கொள்வேன். இளைஞிகளுக்கு நான் சொல்வது நிறம் ஒரு பிரச்சினையே இல்லை.
அழகு கிரீம்களை நம்புவதற்கு பதிலாக, உங்களை நீங்களே நேசியுங்கள், நம்புங்கள் ஜெயிக்கலாம் என்கிறார்.
6. சங்கீதா தாமஸ்(28):
எனது சிறுவயதில், ரீடர் டைஜிஸ்ட்டில் வெளியான ’வாரீஸ் டைரீ’ கதையை படித்து, அவளின் நடவடிக்கைகள் மற்றும் அழகில் ஒரு ஆழமான தாக்கத்தை உணர்வேன்.
அவளும் என்னைப்போல கறுப்பு என்பதால் உள்ளுக்குள் ஒரு பெருமிதமான சந்தோஷமடைவேன் என்கிறார் இந்த கறுப்பான கறுப்பு ரசிகை.
7. யாசிம் பொன்னப்பா(32):
நடிகையும் மாடலுமான இவர் கூறுகையில், ‘என்னுடைய அம்மா சூரிய வெயிலில் விளையாடினால் தொடர்ந்து திட்டுவார்.
என்னை திருமணம் செய்ய பொருத்தமானவர் கிடைப்பது கஷ்டம் என்பார். அவர் வாயை அடைக்க எந்த அசிங்கமும் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு அமைதியாகி விடுவேன் என கறுப்பு பற்றிய சமுதாய கருத்தை மறைக்காமல் திறக்கிறார்.
8. லாவண்யா கண்ணன்(28):
புகைப்படக்காரரான இவர் கூறும்போது, சமுதாயத்தில் கறுப்பு, வெள்ளை வேற்றுமை இருப்பதை நான் வளரும்போது உணர்ந்திருக்கிறேன்.
என்னைவிட என் சகோதரி நிறம் கம்மிதான் அதனால், என் தங்கையைவிட என்னை உயர்வாக என் பெற்றோர்களே கருதுகின்றனர். அதனால், கறுப்பும் அழகுதான் என்ற எண்ணத்துக்கு மக்கள் அவ்வளவு எளிதாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றார்.
9. மேகா ராமசாமி(33):
இவர் ஒரு நடிகர் மற்றும் இயக்குனர். என் உட்பட இளைஞிகளுக்கு நான் கூறுவது, ’கறுப்புநிறம் பற்றிய தாழ்ந்த எண்ணத்தை சமுதாயத்தில் மாற்றுவது, பாதுகாக்க நினைப்பது ஒரு நீண்ட பயணம் போன்றது.
நீங்கள், கோதுமையோ, அழுக்கோ, அல்லது சாக்லேட்டோ அல்ல. கறுப்பை அழகுக்கு எதிராக வைப்பது யதார்த்தம். ஆனால், உங்களை கறுப்பு என்று சொல்லிக்கொண்டு காதலியுங்கள் சக்தி பெறுவீர்கள்’ என வீரியமாக கூறுகிறார்.
அழகுக்கு வரையரை ஏது? அதுபோல, மனித நிறம் ஓவிய நிறம்போல இருப்பதில்லை, இளமையும் ஆரோக்கியமும் கூட நிறத்தின் செல்வாக்கில் பங்கெடுக்கிறது. இதையும் தாண்டி முக அமைப்பு முக்கியமானது.
முகத்தில் கண், மூக்கு, தாடை அமைப்புகள் கூட ஒருவரின் அழகை உச்சத்துக்கு கொண்டு செல்லும் அதற்கு மாறாகவும் செய்யும்.
முழுத்தோற்றமாக உடற்கட்டமைப்பும் அழகுக்கு பலம் சேர்க்கிறது. மனிதரில் கறுப்பு வெள்ளை இரு நிறமல்ல. அதன் இடைவெளிக்குள் அடர்த்தி வேறுபாட்டால் ஆயிரக்கணக்கான நிறங்கள் உள்ளன.
ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்தி ரசிக்க தூண்டுவதுதான் இயற்கை நோக்கமே தவிர, ஒன்றை ஒன்று தாழ்வுபடுத்தி தண்டித்துக்கொள்வது அல்ல.

No comments:

Post a Comment