தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 செப்டம்பர், 2014

தாம்பத்திய உறவு மேம்பட கற்றாழை!


இயற்கை நமக்கு கொடுத்த கொடைகளில் ஒன்று கற்றாழை, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சோற்றுக் கற்றாழை மடல்களப் பிளந்த நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்லதண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்.
கூந்தல் வளர
கற்றாழையின் சதைப் பகுதிகளை சேகரித்துக் கொண்டு, அதில் சிறிது படிக்காரத் தூளை தூவி வைக்கவும், சிறிது நேரம் கழித்து பார்த்தால் சதையில் உள்ள நீர் பிரிந்து விடும்.
இதில் நீருக்கு சமமான அளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு சுண்டக் காய்ச்சி வைத்துக் கொண்டு தினசரி தடவினால் கூந்தல் உதிர்வது நின்று, நன்கு அடர்த்தியான முடியினை பெறலாம்.
தாம்பத்திய உறவு மேம்பட
சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால் விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும்.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு
கற்றாழையின் சோற்றுப் பகுதியை எடுத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும், எண்ணெயை பசுமை நிறமாக மாறிவிடும்.
இதனை குளியலுக்கு பயன்படுத்தினால் உடலில் உள்ள சூடு நீங்கி குளிர்ச்சியாக இருக்கும்.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள்
தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
தோல் பளபளக்க
கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும், தோல் நோய் வராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக