தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, September 24, 2014

சர்க்கரை நோயால் அவஸ்தையா?

பொதுவாக 40 வயதை எட்டி விட்டாலே தொல்லை தரும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய்.
முறையான உணவு பழக்கங்களின் மூலமும், உடற்பயிற்சியின் மூலமும் இந்த நோயை விரட்டிவிடலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்.
இந்த நோயை கட்டுபடுத்த உதவும் பழங்களில் ஒன்று தான் சீதாப்பழம்.
இதுமட்டுமா புற்றுநோயை எதிர்க்கும் அக்சிடோஜெனின்களை பெருமளவு கொண்டிருக்கிறது.
இந்த பழத்தில் சர்க்கரை நோய்க்கு எதிரான குணங்கள் உள்ளன. இந்த குறிப்பிட்ட குணம் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தி, தசைகளுக்கு குளுக்கோஸ் சென்றடையும் வழிகளை மேம்படுத்துகிறது.
உடலில் குளுக்கோஸ் பயன்படும் செயல்பாட்டை இந்த குணம் தான் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த மிக முக்கியமானது வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுபடுத்த முடியும்.
மேலும் உடலுக்கு தேவையான தாதுக்களில் மிக முக்கியமானது மக்னீசியம், இத் தாது மிக குறைவான அளவு இருக்கும் பட்சத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதேபோன்று பொட்டாசியம் தாதுவும் குறைவான அளவு இருந்தால் சர்க்கரை நோய்க்கான வாய்ப்புகள் அதிகம்.
அதிகளவு மக்னீசியமும், பொட்டாசியமும் சீதாப்பழத்தில் நிறைந்துள்ளன, மேலும் இரும்புச் சத்தும் உள்ளது.
இது இரத்த சோகையை கட்டுப்படுத்தவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

No comments:

Post a Comment