தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ஆழ்ந்த அனுதாபங்களுடன் விடைபெறும் ஆர்-குட்


கல்லூரி மாணவர்களையும், இளைய சமூதயாத்தையும் உலகத்தோடு இணைக்கும் முயற்சியில் ஜனவரி 24ம் திகதி 2004ல் தன்னை இணைத்து கொண்டது ஆர்குட்.
2000ம் ஆண்டு Y2K பிரச்சனையிலிருந்து மீண்டு கணனி துறைக்கு புதியதாய் அறிமுகமானது சமூக வலைதளங்கள். தற்போது ஃபேஸ்புக்,ட்விட்டர் என பரவி விரிந்து கிடக்கும் சமூகத்திற்கு முதலில் அறிமுகமான சமூக வலைதளம் ஆர்குட் தான்
ஃபேஸ்புக்கும் பெப்ரவரி 4ம் திகதி 2004ல் சம காலத்தில் தொடங்கப்பட்டது தான். ஆனால் ஆர்குட் தற்போது தனது சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருக்கிறது.
சரிவை சந்தித்த ஆர்குட்
ஆர்குட் தளத்தை கூகுள் நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது. அறிமுகம் செய்யப்பட்ட அதே ஆண்டில் அறிமுகமான ஆர்குட் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை ஈர்த்தது.
ஆனால் தற்போது இந்த ஆர்குட் வலைத்தளத்தின் செயல்பாடு வரும் செப்டம்பர் 30ஆம் திகதியுடன் நிறுத்தப்படும் என அறி்வித்திருந்தது.
அதுமட்டுமின்றி ஆர்குட் நிறுவனம் உங்களது புகைப்படங்கள், தகவல்கள் ஆகியவற்றை கூகுள் ப்ளஸில் சேமித்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.
ஆரம்பத்தில் பிரபலமாய் வந்த ஆர்குட்டிற்கு சோதனையாய் வந்தன அதிநவீன வசதி கொண்ட ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன் போன்ற சமூக தளங்கள்.
கூகுள் இந்த போட்டியை சமாளிக்க கூகுள் பிளஸ் என்ற சமூக வலைதளத்தை தொடங்கியது. இதனால் ஏற்கனவே வீழ்ச்சியின் பிடியில் இருந்த ஆர்குட்க்கு இது மேலும் சரிவை தந்தது.
முன்னோடியான ஆர்குட்
ஆர்குட் ஆரம்பித்த காலத்தில் பிரபலமான வார்த்தைகளாக 'ஸ்க்ராப்' போஸ்ட், ஆர்குட் சாட் போன்றவை ஆர்குட் பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருந்த வார்த்தைகளாக இருந்தன.
ஆனால் தற்போது அந்த வார்த்தைகள் மறந்து போய் ஸ்டேட்டஸ், டிவிட் என முற்றிலும் மாறி விட்டது. மற்ற சமூக வலைதளங்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஆர்குட் ஒரு முன்னோடியாக விளங்கியது என்றே கூறலாம்.
ஆர்குட்டிற்கு இன்று செப்டம்பர் 30, உலகமே குட்பை சொல்லி கொண்டிருக்கிறது. சிலர் ஆர்குட்டிற்கே சென்று தங்கள் வருத்தத்தை பதிவு செய்கின்றனர்.
பலர் பதிவு செய்துள்ள பதிவுகளில் ’எங்கள் தலைமுறையில் பிரபலமான சமூக வலைதளம்` என தங்கள் வருத்தம் கலந்த பதிவுகளை வெளியிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக