தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 மார்ச், 2012

சாகாம இருக்குனும்!!


அந்த நாட்டு ராஜாவுக்கு சாகாம இருக்குனும்னு ஆசை வந்துடுச்சு
அதனால அந்த நாட்டுல இருக்கற வைத்தியர்களை வரச்சொல்லி 
இன்னும் ஒருமாசம் உங்களுக்கு டைம் இந்த ஒரு மாசத்துக்குள்ள நான் சாகாம இருக்கறதுக்கு நீங்க ஒரு மருந்து கண்டுபிடிச்சடனும் அப்படி இல்லன்ன நீங்க சாகவேண்டியதுதான் அப்படின்னுட்டாரு 

வைத்தியர்களுக்கெல்லாம் வயித்த கலக்க ஆரமிச்சிடுச்சு 
அந்த நாட்டிலேயே புகழ்பெற்ற ரிஷி ஒருத்தர் இருந்தாரு அவருகிட்ட போய் புலம்பினாங்க அவரும் வைத்தியர்களுக்கு உதவி பன்றதா சொல்லிட்டாரு

அந்த மாசத்தோட கடைசிநாள் ராஜா எல்லா வைத்தியரையும் கூப்பிட்டு என்ன மருந்து கண்டுபிடிச்சிட்டிங்களான்னுகேட்டாரு அவங்கல்லாம் ரிஷிய கைகாட்டிவிட்டாங்க மன்னன் ரிஷிய கேட்டாரு
மருந்து கண்டுபிடிச்சிட்டிங்களான்னு

ரிஷியும் கண்டுபிடிச்சிட்டேன் மன்னா அப்படின்னு ஒரு கண்ணாடி புட்டியில இருந்த மருந்த கொடுத்தாரு

ராஜாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியல இத சாப்பிட்டா நிஜாலுமே சாவே வராதா என கேட்டார்

ரிஷி சொன்னாரு ஆம் மன்னா இதை சாப்பிட்டிங்கன்னா உங்களுக்கு சாவே கிடையாது ஆனா ஒரே ஒரு கண்டிஷன் ஒவ்வொரு மருந்துக்கும் சில பத்தியங்களை பின்பற்றனும் அப்படி அந்த பத்தியங்களை சரியா பின்பற்றலைன்னா அந்த மருந்தும் சரியா வேலைசெய்யாது அதுபோலத்தான் இந்த மருந்துக்கும் ஒரு கண்டிஷன் இருக்குன்னாரு

அது என்ன கண்டிஷன்னு ராஜா கேட்டாரு

இந்த மருந்த குடிக்கறதுக்கு முன்னாடி நீங்க குரங்கமட்டும் நினைக்கவே கூடாதுன்னு சொல்லிட்டு போய்ட்டாரு

அதுக்கப்புறம் அந்த மருந்த பார்க்கும்போது மட்டுமில்ல நினைச்சாலே குரங்கு ஞாபகம்தான் அந்த ராஜாவுக்கு வந்துச்சு கடைசிவரைக்கும் அந்த

மருந்த அந்த ராஜாவல குடிக்கவே முடியல

இது நடக்காத ஒன்றுக்கு அசைப்பட்ட மன்னனுக்கு ஒரு சூப்பரான சைக்காலஜிக்கல் ட்ரீட்மன்ட் கொடுத்த நம்ம நாட்டுகதை

ஒரு வெளிநாட்டு கதையையும் கேட்டுடுங்க

இரண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு தகவல் கிடைச்சது ரொம்பவும் ஆச்சரியமான தகவல் அது
இதுவரைக்கும் கண்டுபிடிக்காத ஒரு தீவு இருக்கறதாகவும் (கன்னித்தீவு இல்லீங்க) அந்த தீவுல ஒரு விதமான பூச்சி இருக்கறதாகவும் அந்த பூச்சி யாராயாச்சும் கடிச்சுதுன்னா அவங்களுக்கு சாவே வராது என்பதுதான் அது

அவங்க அது குறித்து ஆய்வு செய்ய அந்த தீவ தேடி பயணம் போனாங்க சில ஆண்டுகள் கஷ்ட்டப்பட்டு தேடி ஒரு வழியா கண்டுபிடிச்சு அந்த தீவுக்குபோறாங்க அங்க இருக்கற பழங்குடி மக்கள் கிட்ட போய்
அப்படி ஒரு பூச்சி இருக்கிறது உண்மையா அந்த பூச்சி இங்க யாரயாச்சும் கடிச்சி நீன்ட காலம் சாகாமலேயே உயிர் வாழ்ந்துட்டு இருக்காங்கலான்னு விசாரிக்கிறாங்க

அவங்களும் அது உண்மைதான்னு சொல்றாங்க அந்த பூச்சிகள் அந்த தீவின் ஒரு ஒதுக்குபுறமான இடத்துல இருக்கறதாகவும் அந்த பகுதிக்கு நாங்கள் யாரும் போவது இல்லை என்றும் நீங்களும் தெரியாம போயிடபோறீங்க என கூறி எச்சரிக்கிறாங்க

இவங்களுக்கு மறுபடியும் ஆச்சரியம் ஏன் நீங்க அங்க போகமாட்டேங்கறிங்க எங்களையும் போகவேனாம்னு சொல்றீங்க அந்த பூச்சி கடிச்சா நல்லதுதானே சாகாம நீன்ட நாள் வாழலாமே அப்படின்னு ஆராய்ச்சியாளர்கள் கேட்க

அந்த பழங்குடியினர் அந்த மாதிறி ஒரு பூச்சி கடிச்சவங்க பல நுறு வருஷங்களா ஒரு வீட்ல இன்னும் உயிரோட வாழ்ந்துகிட்டு இருக்காங்க அவங்கள போய் பாருங்கன்னு அந்த வீட்ட காமிக்கிறாங்க
இவங்களுக்கு ஆர்வம் தாங்கமுடியல அந்த வீட்டிற்கு வேகமபோய் அந்த வீட்ல கேட்கிறாங்க

அந்த வீட்ல இருக்கிற ஒரு பெண் வீட்டு திண்ணையில் படுத்திருக்கும் ஒரு உருவத்தை காட்டி கூறுகிறாள்

இதுதான் அது,
இது எவ்ளோ நாளா இருக்குன்னு எல்லாம் எங்களுக்கு தெரியாது எங்க அப்பா அம்மா விட்டுட்டு போனாங்க அவங்களுக்கும் தெரியாதாம் எங்க சந்ததி பூரா இத பார்த்துக்கனும் தலையெழுத்து என புலம்புகிறாள் தொடர்ந்து அவளே கூறுகிறாள் அதுக்கு கண்ணு தெரியாது காதும் கேட்காது ஒரு விபத்துல ஒரு கை போயிடிச்சு எது போனாலும் ஆனா சாகவே சாகாது நாங்க தான் வேளா வேளைக்கு சோறு ஊட்டி பார்த்துட்டு இருக்கோம் என்கிறாள்

ஆராய்ச்சியாளர்களுக்கு தூக்கிவாரிபோட்டது இப்படி நீன்ட நாள் உயிரோடு வாழனுமா அவர்களுக்கு பயம் வந்துவிடுகிறது எங்கிருந்தாவது அந்த பூச்சி வந்து அவர்களை கடித்துவிடுமோ என்ற பயம்தான் அது

நாம் எவ்வளவு காலம் வாழ்கின்றோம் என்பது முக்கியமே அல்ல வாழ்கின்ற காலத்தை நாம் எப்படி நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்கின்றோம் என்பதுதான் முக்கியம்

சாகாமல் வாழ்வது கூட சாத்தியம்தான் அன்னை தெரசா போன்றவர்கள் இறந்த பின்பும் நாம் நினைவுகூறுகிறோம் அல்லவா அதுபோல நாமும் பிறருக்கு ஏதோஒருவகையில் உதவுவதன் முலம் மக்கள் மனதில் நீங்கஇடம் பிடித்தோமானால் நமக்கும் சாவே இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக