தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 மார்ச், 2012

சீர்காழி கோவிந்தராஜன்!


டி.எம்.எஸ் பாடிய அத்தனைப் பாடல்களுமே எனக்குப் பிடிக்கும். அவர் குரல் கேட்டால் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல் மயங்கி நின்றுவிடுவேன். எனக்குப் பொழுதுபோக்கு, யோகா, ஆழ்நிலை தியானம் எல்லாமே டி.எம்.எஸ். பாடல்கள்தான். ஆனாலும், மற்ற பாடகர்களின் பாடல்களையும் நான் ரசிப்பதுண்டு. அந்த வரிசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியவற்றில் எனக்குப் பிடித்த சில...

1) மலையே உன் நிலையை நீ பாராய்...
2) மாம்பழத்தோட்டம் மல்லிகைக்கூட்டம் மணக்க வரும் மாலைப் பொழுதோடு... (இந்த இரண்டு பாடல்களையும் என் சின்ன வயதில், டி.எம்.எஸ். பாடிய பாடல் என்று ரொம்பக் காலம் நினைத்துக்கொண்டு இருந்தேன்.)
3) சாட்டைக் கையில் கொண்டு காளை ரெண்டு...
4) சமரசம் உலாவும் இடமே...
5) எங்கிருந்தோ வந்தான் கண்ணன் இடைச்சாதி நானென்றான்...
6) உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...
7) தேவன் கோயில் மணியோசை...
தவிர, அவர் பாடிய எல்லா பக்திப் பாடல்களும்!

எஸ்.டி.சுந்தரம் கதை வசனத்தில் ராமாயணம் ரேடியோ நாடகத்தில் ராமனாகக் குரல் கொடுத்து நடித்திருப்பார் சீர்காழி. அருமையாக இருக்கும்.

டி.எம்.எஸ். பிறந்த அதே தேதியில்தான் (மார்ச் 24) சீர்காழி அமரரானார்!
 










டிஎம் எஸ்ஸும், சீர்காழி கோவிந்தராஜனும், தமிழ் திரையிசை வானின் அதிசய நிகழ்வுகள்- இரட்டை நிலவுகள். 
சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், "அமுதும் தேனும் எதற்கு" பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்!


-
Hanumanthan K Rao 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக